மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு :
PM Modi Launch Maruti Suzuki’s First EV e Vitara Electric Car : சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் கார், ஆட்டோ, பேருந்துகள் மின்சாரத்தால் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான தேவை, பொதுமக்களின் விருப்பம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.
சுசூகியின் முதல் மின்சார கார் :
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி(Maruti Suzuki), தனது முதல் மின்சார SUV, e-Vitara-வை அறிமுகப்படுத்த உள்ளது. குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசூகி ஆலையில் பிரதமர் நரேந்திர மோடி(PM Narendra Modi) இந்த வாகனத்தை நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அகமதாபாத் அருகே உள்ள ஹன்சல்பூர் தொழிற்சாலையில் e-Vitara-வின் உற்பத்தி வரிசையையும் அவர் துவக்கி வைக்கிறார்.
100 நாடுகளுக்கு ஏற்றுமதி :
இந்தியாவில் தயாரிக்கப்படும் மாருதி e-Vitara, ஜப்பான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஹூண்டாய் கிரெட்டா EV, MG ZS EV ஆகியவற்றுடன் போட்டியிட 2026ல் இந்தக் கார் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேக் இன் இந்தியாவில் சுசூகி :
மேக் இன் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு முக்கிய உதாரணமாக, சுசூகியின் முதல் உலகளாவிய பேட்டரி மின்சார வாகனத்தை (BEV) "e VITARA" ஐ பிரதமர் தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி e-Vitara 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் வருகிறது. சிறிய பேட்டரி 346 கிமீ WLTP வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : இந்தியாவில் அறிமுகமான டெஸ்லா 'ஒய்' மாடல் கார் : சிறப்பம்சங்கள்
சார்ஜ் செய்தால் 428 கி.மீ. செல்லும் :
அதே நேரத்தில் பெரிய பேட்டரி பேக் அதன் ஒற்றை மோட்டார் கட்டமைப்பில் 428 கிமீ வரம்பை வழங்கும். மறுபுறம், 61 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் இரட்டை மோட்டார் வேரியண்ட் 412 கிமீ வரம்பை வழங்கும். டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் மாருதி e-Vitara பொதுவில் காட்சிப்படுத்தப்பட்டது.
======