அமெரிக்காவின் யோசனையை ஏற்ற இஸ்ரேல் :
PM Modi Welcomes Donald Trump's Israel Hamas War Ceasefire : காசாவில் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முன்வைத்த யோசனையை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டு இருக்கிறது. ஹமாஸ் இதற்கு ஒப்புக் கொண்டால். காசாவில் முழுமையாக அமைதி திரும்பி விடும். ஆனால், ஆயுதங்களை கைவிட்டு ஹமாஸ் அமைதி வழிக்கு திரும்புமா என்பது கேள்விக்குறி தான். அமெரிக்காவின் விரிவான போர் நிறுத்த திட்டம், யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்ற விவாதமும் எழத் தொடங்கி இருக்கிறது.
பிரதமர் மோடி வரவேற்பு :
PM Modi Welcomes Trump’s Gaza Peace Plan : அமெரிக்கா எடுத்த முன் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இருக்கிறார். இதுபற்றி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''காசா போர் நிறுத்தம் குறித்த அதிபர் டொனால்டு டிரம்பின் விரிவான திட்டத்தை வரவேற்கிறோம். அதிபர் டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால மற்றும் நிலையான அமைதியை வழங்குகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் : டிரம்பின் திட்டத்தை ஏற்ற நெதன்யாகு
அரபு நாடுகள் வரவேற்பு :
டிரம்பின்(Donald Trump Proposal) அமைதி திட்டத்தை, எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் வரவேற்று கூட்டு அறிக்கை வெளியிட்டன. கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் டிரம்பின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.
=====