குண்டர்களாக மாற்றும் ராஷ்ரிய ஜனதாதளம்
PM Narendran Modi Criticized RJD Party : பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் தங்கள் குடும்பத்தின் அதிகார நலன்களுக்காக மட்டுமே உழைக்கிறார்கள் என்றும், பீகாரின் ஏழை மற்றும் சாமானிய மக்களின் குழந்தைகளை குண்டர்களாக மாற்றியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆர்ஜேடி கைத்துப்பாகிகள் வழங்கவும் சிந்துக்கும்
தேசிய ஜனநாயகக் கூட்டணி இளம் தலைமுறையினருக்கு கணினிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கும், அதே வேளையில், ஆர்ஜேடி அவர்களுக்கு கைத்துப்பாக்கிகள் வழங்குவது குறித்து சிந்திக்கும் எனவும் விமர்சித்தார்.
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை
ஆர்ஜேடியின் பிரசாரப் பாடல்களையும் முழக்கங்களையும் கேட்டால், நடுங்குவீர்கள் என்றும், பீகார் குழந்தைகளுக்காக ஆர்ஜேடி என்ன செய்ய விரும்புகிறது என்பது அதன் தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிவதாகவும் விமர்சித்தார்.மேலும், பீகாருக்கு இனி துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை என்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளார்கள்
இதில், பிஹாரில் காட்டாட்சி வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சியை (65% வாக்குப்பதிவு நடைபெற்றதை குறிப்பிடுகிறார்) மக்கள் வழங்கி இருக்கிறார்கள் என்றும் பிஹார் இளைஞர்கள் வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளார்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என பரவலாகப் பேசப்படுகிறது. பிஹாரின் சகோதரிகளும் மகள்களும் தேசிய ஜனாயகக் கூட்டணிக்கு சாதனை வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
சீதாதேவி பூமி குறித்து மோடி
அன்னை சீதாவின் புனித பூமிக்கு நான் வந்ததை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். 5-6 ஆண்டுகளுக்கு முன்பு அன்னை சீதாவின் இந்த பூமிக்கு வந்தேன். அடுத்தநாள் உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. அன்னை சீதாவின் ஆசியுடன் தீர்ப்பு குழந்தை ராமருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நான் ரகசியமாக பிரார்த்தனை செய்தேன். அன்னை சீதா தேவியிடம் முன் வைக்கப்படும் பிரார்த்தனை எப்போதாவது தோல்வி அடையுமா? பிரார்த்தனை பலித்தது. உச்ச நீதிமன்றம் குழந்தை ராமருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது என்று தெரிவித்துள்ளார்.