Ramayana Wax Museum, first of its kind in the world, has been set up in Ayodhya
Ramayana Wax Museum, first of its kind in the world, has been set up in Ayodhya

வாங்க திரேதா யுகம் செல்வோம்: ராமாயண மெழுகுச் சிலை அருங்காட்சியகம்

அயோத்தியில் உலகிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டு இருக்கும், ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.
Published on

ராமபிரான் அவதரித்த அயோத்தி

World's first Ramayana wax museum open in Ayodhya during Diwali : ராம்பிரான் அவதரித்த புனித இடம் அயோத்தி. இங்கு ஏற்கனவே, கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். தீபாவளி திருநாளின் போது 26 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

ராமாயண அருங்காட்சியகம்

இந்தநிலையில், ராமாயண கதைப் பொருளில் மெழுகு சிலை அருங்காட்சியம் ஒன்று அயோத்தியில் உருவாக்கப்பட்டு, பக்தர்கள் ஈர்க்க இருக்கிறது. கட்டுமான பணிகள் நிறைவுபெற்று தீபாவளியன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இதனை திறந்து வைக்கிறார்.

மெழுகுச்சிலை அருங்காட்சியம்

மெழுகுச்சிலை ராமாயண அருங்காட்சியகம், 9,850 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதற்காக 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களை ராமாயணம் கதை நிகழ்ந்த திரேதா யுகத்துக்கே நேரடியாக அழைத்து செல்லும் வகையில் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பக்தி, சுற்றுலாவுக்கு முக்கியத்துவம்

பக்தி மையமாகவும், முக்கிய சுற்றுலாத்தலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் புராணம், தொழில்நுட்பம் மற்றும் கலைத்திறனை இணைத்து புதிய அனுபவத்தை வழங்க இருக்கிறது.

கதாபாத்திரங்களின் மெழுகு சிலைகள்

புதிய ராமாயண மெழுகு அருங்காட்சியகத்தின் உள்ளே ராமர், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன், ராவணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் 50 உயிருள்ள மாதிரி மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன.

அருங்காட்சியகத்தை பார்வையிட 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். மெழுகு சிலைகள் இடம்பெற்று இருப்பதால், அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நூறு நூறு பேராக மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த மெழுகு சிலை அருங்காட்சியம் ராமாயண கதை நடைபெற்ற திரேதா யுகத்திற்கே நம்மை அழைத்து செல்ல இருக்கிறது. ராமனையும், சீதையையும், அனுமனையும், ராவணனையும் வழிபட்டு பக்தர்கள் சிறந்த ஆன்மிக அனுபவம் பெறலாம்.

-------------

logo
Thamizh Alai
www.thamizhalai.in