ரஃபேல் போர் விமானங்கள்
President Draupadi Murmu Fly With Rafale Fighter Jet : பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானங்கள், விமானப்படையின் வலிமையை அதிகரிக்க செய்து இருக்கின்றன. பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் போது இந்த விமானங்களின் செயலாற்றல் அற்புதமாக இருந்தது. இந்திய விமானப்படையின் மிக முக்கிய போர் விமானங்களாக இவை திகழ்ந்து வருகின்றன.
விமானப் படையில் ரஃபேல் விமானங்கள்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன
இந்தநிலையில், ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்ட அவர் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
போர் விமானங்களில் ஜனாதிபதிகள்
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்தார். முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க : இருமுடி கட்டி, 18 படியேறி, தரிசனம் : சபரிமலையில் ஜனாதிபதி முர்மு
ஜனாதிபதி முர்மு சாதனை
சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் தலைவர் என்ற பெயரை பெற்றார் திரௌபதி முர்மு(Droupadi Murmu Rafale Sortie) தற்போது ரஃபேர் விமானத்தில் பயணித்து வரலாற்று சிறப்பான பதிவை உருவாக்கி இருக்கிறார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது.
=====