சபரிமலை ஐயப்பன் கோவில் :
President Droupadi Murmu Visit Sabarimala Ayyappa Temple in Kerala : உலகப் புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின் போது கூட்டம் அலைமோதும். ஐயப்பனை தரிசிக்க சில சமயம் 36 மணி நேரம் கூட பிடிக்கும். மாதம் தோறும் கோவில் நடை திறக்கும் போது, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஐயப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலை வருகிறார் துணை ஜனாதிபதி :
இந்தநிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 18ம் தேதி துலாம் மாத ( ஐப்பசி ) பிறப்பை முன்னிட்டு 17ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அந்த சமயம் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசு தலைவர் முர்மு வருகிறார். 22ம் தேதி அவர் சபரிமலை வர இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. .
ஐப்பசி மாத வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு(Droupadi Murmu Ayyappa Darshan) கலந்துகொண்டு ஐயப்பனை தரிசிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்த நிலையில், பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அப்போது நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர்சூழலால் அவர் வர முடியாத நிலை ஏற்பட்டது.
நீலிமலை பாதையில் நடந்து செல்கிறார்
இந்தநிலையில், 22ம் தேதி கொச்சி விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். பின்னர் கார் மூலம் பம்பை வந்து அங்கிருந்து நீலிமலை பாதை வழியே நடந்து செல்ல உள்ளார்(Droupadi Murmu Visit Ayyappa Temple Date). இருப்பினும் மாற்று ஏற்பாடாக வாகனம் மூலம் சந்நிதானம் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : சபரிமலை நடை திறப்பு: 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு
பக்தர்கள் இடையே குழப்பம்
பாதுகாப்பு கருதி அவர் வருகை குறித்த முழு விவரம் எதையும் தேவசம் போர்டுக்கு வெளியிடவில்லை. குடியரசு தலைவர் வரும் நாளில் பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தரிசன முன்பதிவுகளை மேற்கொள்வதில் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
=====