சபரிமலை நடை நாளை திறப்பு: 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு

Sabarimala Ayyappa Temple Opening Dates 2025 in Purattasi Month : புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (16ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது.
Sabarimala Ayyappa Temple Opening Dates 2025 in Purattasi Month Tamil
Sabarimala Ayyappa Temple Opening Dates 2025 in Purattasi Month Tamil
1 min read

சபரிமலை கோவில் நடை திறப்பு :

Sabarimala Ayyappa Temple Opening Dates 2025 : உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் அமைந்து இருக்கிறது. மகரவிளக்கு, மண்டல பூஜையை தவிர்த்து, மாத பூஜைகளுக்கு ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் நடை திறக்கப்படும். அதன்படி, புரட்டாசி மாதம் 17ம் தேதி பிறக்க உள்ள(Purattasi 2025 Date) நிலையில், கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

தினமும் சிறப்பு பூஜைகள் :

தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை மறுநாள் அதிகாலை நெய்யபிஷேகம் தொடங்கி, வழக்கமான பூஜைகள்(Sabarimala Ayyappa Temple Poojai 2025 Date And Time) நடைபெறும். 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவுக்கு வரும்.

சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு :

இதனிடையே, பம்பையில் 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு(International Ayyappa Devotees Manadu 2025 Date) நடைபெறுகிறது. இது முதல் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் படிக்க : ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தரிசனத்திற்காக குவியும் பக்தர்கள்

ஐயப்ப பக்தர்களை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து சபரிமலையின் ஆன்மிக முக்கியத்துவத்தை உலகளவில் பரப்பும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in