பாதுகாப்பான பண மாற்றம் :
Same Day Cheque Deposit Clearance Rules in Indian Banks : விரைவான மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்துவதற்கான புதிய கட்டமைப்பை ரிசர்வ் வங்கி(RBI Rules) வடிவமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்றுவதற்கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளன.
செக் டெபாசிட் - ஒரே நாளில் வரவு வைப்பு :
அதன்படி, இன்று முதல் டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் இனி(Cheque Same Day Deposit Rules in India) ஒரே நாளில் பரிசீலிக்கப்பட்டு சில மணி நேரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தடுக்கவும், தாமதங்கள் அல்லது நிராகரிப்பு செய்யப்படுவதை தவிர்க்கவும் காசோலையில் அனைத்து விவரங்களையும் துல்லியமாக நிரப்பப்படுவதை உறுதி செய்யும்படி வாடிக்கையாளர்களை அந்த இரண்டு தனியார் துறை வங்கிகளும் அறிவுறுத்தியுள்ளன.
பாசிடிவ் பே சிஸ்டம் :
பாசிட்டிவ் பே சிஸ்டத்தை பயன்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், சரிபார்ப்புக்கான முக்கிய காசோலை விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரூ.50,000 க்கும் அதிகமான காசோலைகளை டெபாசிட் செய்வதற்கு குறைந்தது 24 மணி வேலை(Cheque Clearance Time) நேரத்திற்கு முன்னதாக கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு எண், காசோலை எண், தேதி, தொகை மற்றும் பயனாளியின் பெயரை வங்கிக்கு வழங்க வேண்டும்.
உடனே கிளையரன்ஸ் ஆகும் செக்
காசோலையை வழங்கியவுடன் வங்கிகள் இந்த விவரங்களைச் சரிபார்க்கும். தகவல் பொருந்தினால் காசோலைகள் கிளியர் செய்யப்படும்.
இல்லையெனில் கோரிக்கை நிராகரிக்கப்படும். மேலும், பணம் எடுப்பவர் விவரங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பிராந்திய முகவரிகளுக்கு காசோலை விவரங்களை மின்னஞ்சல் செய்ய வேண்டும். வங்கிகள் காசோலையைப் பெறுவதற்கு முன்பு ஒப்புதல் செய்தியை அனுப்பும்.
மேலும், ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ள காசோலைகளுக்கு ஆர்பிஐ பாசிட்டிவ் பேவை(Cheque Deposit Rules 2025) கட்டாயமாக்கியுள்ளது, அதே நேரத்தில் ரூ.50,000 க்கு மேலான காசோலைகளுக்கும் இது கட்டாயம் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க : சில மணி நேரத்தில் "Cheque Clearance" : அக். 4 முதல் புதிய நடைமுறை
செக் கிளியரன்ஸ் கடந்து வந்த பாதை(Cheque Clearance Process) :
* 1980ம் ஆண்டுக்கு முன்பு செக் டெபாசிட் செய்தால், அது கிளியரன்ஸ் ஆக ஒரு வாரம் வரை ஆகும்.
* MICR & CTS முறை அமலுக்கு வந்த பிறகு, இது 1 முதல் 3 நாட்களில் பணம் கிடைக்க வழி செய்தது
*T+1 முறை வந்த பிறகு ஒரே நாளில் செக் கிளியரன்ஸ் செய்யப்பட்டது.
* தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய நடைமுறை மூலம் சில மணி நேரங்களில் பணத்தை பெறலாம்.
===========