
காசோலை பரிவர்த்தனை :
RBI Guidelines for Cheque Clearing Time : தற்போது காசோலை பரிவர்த்தனை முடிவுக்கு வர இரண்டு நாட்கள் வரை ஆகிறது. சி.டி.எஸ் எனப்படும் காசோலைக்கு ஒப்புதல் அளிக்கும் முறையில், பேட்ஜ் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இனி, அவை தொடர்ச்சியான, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
RBI வெளியிட்டுள்ள அறிவிப்பு :
காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தேவையற்ற தாமதத்தை குறைத்து, வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும்.
நான்கு மணி நேரத்தில் கிளியரன்ஸ் :
அக்டோபர் 4ம் தேதி மற்றும் 2026 ஜனவரி 3ம் தேதி என இரண்டு கட்டமாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, காலை 10 மணி முதல் 11 மணி வரை பெறப்படும் காசோலையை, பிற்பகல் 2 மணிக்குள்(Cheque Clearing Time) உறுதி செய்ய வேண்டும்.
அப்படி உறுதி செய்யப்படா விட்டால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தன்னிச்சையாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணம் வரவு வைக்கப்படும். பரிவர்த்தனை முடிந்த பின்னர், காசோலை பெற்று கொண்ட வங்கி, வாடிக்கையாளர் கணக்கில், ஒரு மணிநேரத்திற்குள் பணத்தை வரவு வைக்க வேண்டும்.
மேலும் படிக்க : மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு : டிகிரி இருந்தால் போதும்
வாடிக்கையாளர் சிரமம் தவிர்ப்பு :
இதன் மூலம் காசோலை பண பரிவர்த்தனை வேகமாக நடைபெறுவதோடு, வாடிக்கையாளர்களுக்கு தேவையின்றி ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படும். வருங்காலங்களில் இந்த சேவை மேலும் மேம்படும் போது, வாடிக்கையாளர்கள் ஒரு மணி நேரத்திலேயே காசோலை கிளியரன்ஸ் பெற்று பணத்தை எடுக்க முடியும்” இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
=============