Ritu Tawde has been elected unopposed as new mayor of Mumbai. Shiv Sena's Sanjay Ghadi has been elected as deputy mayor Source : Google
இந்தியா

மும்பையின் புதிய மேயர் ரிது தாவ்டே : பாஜகவினர் கொண்டாட்டம்

Ritu Tawde Mumbai Mayor : மும்பையின் புதிய மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை மேயராக சிவசேனாவின் சஞ்சய் காடி தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார்.

Rohini

மும்பை மாநகராட்சி தேர்தல்

Ritu Tawde Elected As New Mumbai Mayor : அண்மையில் மும்பை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றியையேஅடுத்து , மிக பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பையின் அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. மேயர் பதவிக்கு ரிது தாவ்டே என்பவரை பாஜக வேட்பாளராக அறிவித்தது. துணை மேயர் பதவிக்கு சிவசேனாவின் சஞ்சய் காடி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின்றி தேர்வு

ரிது தாவ்டே மும்பையின் புதிய மேயராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் . துணை மேயராக சஞ்சய் காடியும் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மும்பை மாநகராட்சியில் தாக்கரே குடும்பத்தினரின் 25 ஆண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

பதவியேற்பு

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ரிது தாவ்டே மற்றும் துணை மேயராக சஞ்சய் காடியும் தங்களின் பதவிகளை ஏற்றுக் கொண்டனர் .இவர்களின் பதவி ஏற்பை பாஜகவினர் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க : தொழில்நுட்பம் அடிமைப்படுத்த அனுமதிக்காதீங்க: மாணவர்களுக்கு அறிவுரை

மகாராஷ்டிரா முதல்வர் பாராட்டு

வெற்றி குறித்து மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறுகையில், மும்பை மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காடியும் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் நாங்கள் ஒற்றுமையாக உழைப்போம், மும்பையை வளப்படுத்துவோம் என்ற கருத்தையும் முன்மொழிந்தார் .

கவனம் பெரும் மும்பையின் பட்ஜெட்

நாட்டின் பணக்கார உள்ளாட்சி அமைப்பு என்று கருதப்படும் மும்பை மாநகராட்சியின் 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.24,450 கோடியாகும்.

இது மற்ற சிறிய மாநிலங்களின் பட்ஜெட் தொகையை ஒப்பிடுகையில் சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.