தொழில்நுட்பம் அடிமைப்படுத்த அனுமதிக்காதீங்க: மாணவர்களுக்கு அறிவுரை

தொழில்நுட்பங்கள் தங்களை அடிமையாக்குவதற்கு மாணவர்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.
Prime Minister Modi has advised students to never allow technology to enslave them
Prime Minister Modi has advised students to never allow technology to enslave themGoogle
1 min read

மாணவர்களுடன் கலந்துரையாடல்

Episode 2 of Pariksha Pe Charcha is a special one. It features students from various cities across India : தேர்வு எழுதும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வருகிறார். ”பரிக்‌ஷா பே சர்ச்சா” என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் பிரதமர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடினார்.

காணொலி மூலம் பங்கேற்பு

கோயம்புத்தூர், ராய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் குஜராத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த கலந்துரையாடலில் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘ குழந்தைகள் மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி இல்லாமல் சாப்பிடக் கூட முடியாத நிலை உருவாகி விட்டது. தொழில்நுட்ப சாதனங்கள் அவர்களுக்கு எஜமானராகி விட்டன.

தொழில்நுட்பத்திற்கு அடிமையாக கூடாது

இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மொபைல்களுக்கு அடிமையாகி விட்டீர்கள். தொழில்நுட்பம் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோர் என்று மாணவர்கள் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

வளர்ச்சிக்கு தொழில்நுட்ப பயன்பாடு

தொழில்நுட்பங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாறாக அவற்றை உங்களது திறமைகளை மேம்படுத்தவும், ஆற்றலை வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு அல்லது மொபைல் போன்களை நம் எஜமானராக மாற அனுமதிக்கக் கூடாது. நாம் செயற்கை நுண்ணறிவை திறமையாக பயன்படுத்தலாம்.

தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும்

தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு முந்தைய வினாத்தாள்களை மாணவர்கள் பயிற்சி செய்ய வேண்டும். நல்ல உறக்கம் தேவை. தேர்வுகளுக்கு நன்றாக தயாரானப் பிறகு நீங்கள் ஒருபோதும் பதற்றமாக உணரமாட்டீர்கள். ஒரு நல்ல இரவு தூக்கம் தான் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்,

தெளிவான சிந்தனையே தலைமைப் பண்பு

தலை​மைப் பண்பு என்​பது தேர்​தலில் போட்​டி​யிடு​வதோ அல்​லது அரசி​யல் கட்சி தொடங்​கு​வதோ அல்ல; மாறாக, தெளி​வான சிந்​தனை​யும், தகவல் தொடர்​பும் அத்​துடன் முதலில் தன் மீது தனக்கு இருக்​கும் நம்​பிக்​கை​யுமே ஒரு​வரைத் தலை​வ​ராக்​கும்.

தலைவராக மாற தலைமைப் பண்பு

தலை​வ​ராக உரு​வெடுக்க வேண்​டும் என்​றால் முதலில் உங்​களை நீங்​கள் நம்ப வேண்​டும். எதை​யும் முன்​னின்று நடத்​தும் மனப்​பாங்கை வளர்த்​துக் கொள்​ளுங்​கள்.

உங்​கள் கருத்​துக்​களை மற்றவர் மீது திணிக்​காமல், அவற்றை அவர்​களுக்​குத் தெளி​வாக எடுத்​துரைப்​பதே மிகச் சிறந்த தலை​மைப் பண்​பாக அமை​யும்.

கல்வி, விளையாட்டு சமநிலை

விளை​யாட்​டை​யும் கல்​வியை​யும் சமமாகப் பாவி​யுங்​கள். விளிம்பு நிலை மக்​களின் கல்வி வளர்ச்​சியை மேம்​படுத்த ‘பிஎம்-ஜன்​மன்' போன்ற திட்​டங்​களுக்கு மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து செயல்​பட்டு வரு​கிறது” என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in