தெற்கு ரயில்வேயில் வேலை :
Southern Railway Apprentices Recruitment 2025 : இந்திய ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவு. அந்த கனவை நனவாக்கும் விதமாக, தெற்கு ரயில்வே தற்போது 3,518 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பு - அருமையான வாய்ப்பு :
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள ரயில்வே பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்த இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
கல்வித்தகுதி, ஊதியம் :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6,000 வழங்கப்படும்.
ஐடிஐ முடித்தவர்களுக்கு மாத ஊதியம் ரூ.7,000 ஆக இருக்கும். இது ஒரு பயிற்சிப் பணி என்பதால், பின்னர் ரயில்வேயில் நிரந்தர பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் :
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வயது தளர்வு உண்டு. மேலும், SC/ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. மற்ற பிரிவினர் 100 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி? :
தெற்கு ரயில்வே அப்ரண்ட்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 25 வரை ஏற்கப்படும்.
அதிக மதிப்பெண் இருந்தால் வாய்ப்பு :
வேலைவாய்ப்புக்கான தேர்வு முறை, விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். எனவே, மதிப்பெண் அதிகம் உள்ளவர்கள் எளிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க : HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : சென்னையில் நாளை Interview
ஆவண சரிபார்ப்பு (Document Verification) மூலம் விண்ணப்பதாரர்களின் தகுதிகள் உறுதிப்படுத்தப்படும். எனவே, ஆர்வம் உள்ளவர்கள் கடைசி தேதிக்கு முன்பு விண்ணப்பித்து, தங்கள் கனவுப் பணியை அடையலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
======