
HCL ஐடி நிறுவனம் :
HCL Job Vacancy in Chennai : சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்.சி.எல். அதில் அடுத்தடுத்து வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை :
ஓடிசி கலெக்சன் (OTC Collections), ஆர்டர் மேனேஜ்மென்ட் (Order Management), கேஷ் அப்ஸ் (cash Apps) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக விண்ணபிக்க விரும்புவோர் பிகாம், எம்பிஏ (பைனான்ஸ்) படிப்பை படித்து இருக்க வேண்டும். அதேபோல் ஓடிசி கலெக்சன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
நல்ல டீம் லீடராக இருக்க வேண்டும் :
ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இரவுப் பணியை பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும். எம்எஸ் ஆபீசில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.பிரச்சினைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். டீம் பிளேயராக செயல்பட வேண்டும், Project Methodology அனுபவம் இருக்க வேண்டும்.
திறமைக்கு ஏற்ப ஊதியம் :
தற்போதைய அறிவிப்புக்கான பணிக்குரிய ஊதியம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
ஆக. 28ல் நேர்காணல் :
இந்தப் பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 28ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை(HCL Interview Date 2025) நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 2, Sandhya Infocity - HCL Tech, Navalur என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் 4 Updated Resume வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க : மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு : டிகிரி இருந்தால் போதும்
அடையாள ஆவணங்கள் அவசியம் :
அதேபோல் ஆதார், பார்ன் கார்டு, லைசென்ஸ் என்று ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
======