Soap powder mixed into government school nutritious meal: Over 40 children admitted to hospital! source: google
இந்தியா

அரசுப் பள்ளி சத்துணவில் சோப்பு பவுடர் கலப்பு : 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

பிகார் அரசுப் பள்ளி சத்துணவில் உப்புக்கு பதிலாக சோப்பு பவுடர் கலக்கப்பட்டதால் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Kavitha prasanna

Soap powder mixed into government school nutritious meal: Over 40 children admitted to hospital!

பீகார் அரசுப் பள்ளி சத்துணவில் சோப்பு பவுடர் கலப்பு: 40 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் நாளந்தா அரசுப் பள்ளியில் அதிர்ச்சி

பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம் பாரசி பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குத் திடீரென வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு உடல்நலக் குறைவு உண்டானது.

மாணவர்களுக்கான உணவில் சோப்பு பவுடர் கலப்பு

சத்துணவை ஆய்வு செய்ததில், உப்புக்கு பதிலாகத் தவறுதலாகச் சோப்பு பவுடர் உணவில் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: இந்திய வம்சாவளி வீரரின் அசத்தல் சாதனை : விண்வெளியில் அனில் மேனன் நடைபயிற்சி, பழுதை சரி செய்தார்..!

மருத்துவமனையில் பதற்றம்

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்ததால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.

பீகார் அமைச்சர் நேரில் ஆய்வு

சம்பவம் குறித்து அறிந்த பீகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காவல்துறை விசாரணை

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சோயா பீன்ஸ் உணவில் உப்பு குறைவாக இருந்ததால், தனியாக உப்பு வழங்கும்போது தவறுதலாகச் சோப்பு பவுடர் வழங்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கவனக்குறைவு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்” : பேரவையில் MGR பாடலை பாடிய TVK எம்எல்ஏ சிந்து : ரசித்து, புன்னகைத்த முதல்வர் விஜய்..!

=====