Southern states should not worry, this bill will never be passed, Rahul Gandhi's speech in Lok Sabha  google
இந்தியா

'தென் மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம், மசோதா ஒருபோதும் நிறைவேறாது' : மக்களவையில் ராகுல் சூளுரை!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் , மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் உரையாற்றினார்.

Rohini

தொகுதி மறுவரையறை -எதிர்ப்பு

மக்களவையில் தென் மாநிலங்களைப் பலவீனப்படுத்தி, வட மாநிலங்களுக்கு கூடுத வலுச் சேர்க்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு நாடளுமன்றதில் திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன்,

மக்களவையில் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்,

திமுகவினர் கருப்பு உடை அனைத்தும் , மசோதாவிற்கு எதிரான வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுகவினர் கருப்பு உடை அணிந்தும், நகலை எரித்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் எதிர்ப்பு

மகளிர் இடஒதுக்கீடு என்னும் போர்வையில் தொகுதி மறுவரையறை என மக்களவையில் விவாதத்தில் உறையாற்றினார் ராகுல் காந்தி , ஜம்மு காஷ்மீிரை போல அனைத்து மாநிலங்களையும் மாற்ற முயற்சிக்கிறது பாஜக அரசு.

மேலும் இந்தியாவின் அரசியில் வரைபடத்தையே மாற்ற முயற்சிக்கிறது இந்த அரசு என்று ராகுல் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க :Delimitation : தமிழகத்திற்கு 59 தொகுதிகள் : தென்மாநிலங்களின் எண்ணிக்கை 195 ஆக உயரும் : புள்ளி விவரங்களோடு அமித் ஷா!

மசோதா ஒருபோதும் நிறைவேறாது

தென் மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம் இந்த மசோதா ஒருபோதும் நிறைவேறாது என்றும், அரசமைப்பைவிட மனுஸ்மிருதியே முக்கியமாக பாஜக பார்க்கிறது என்று குறிப்பிட்டார்,

பணமதிப்பிழப்பு , ஒபரேஷன் சிந்தூர் போன்ற பல மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் தற்போது பிடிபட்டுக் கொண்டார் என்று ராகுல் கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் உரை : மக்களவையில் அமளி

ராகுலின் பேச்சுக்கு மக்களவையில் கடும் அமளியானது ஏற்பட்டுள்ளது.

மேலும், பிரதமரை மேஜிக்காரர் என சொல்லுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என கிரண் ரஜ்ஜு தெரிவித்தார்,

இதனால் மக்களவையில் கடும் அமளியானது ஏற்பட்டது

தொகுதி மறுவரையறை : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறைக்கு கனிமொழி , ஆ ராசா , ராகுல் காந்தி போன்றோரும் கடும் எதிப்பு தெரிவித்து தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க :மறுவரையறை மசோதா : கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி : மக்களவையில் கனிமொழி கண்டனம்!