

மகளிர் இடஒதுக்கீடு மசோதா
Tamil Nadu 59, Karnataka 42 : Amit Shah shares breakdown of Lok Sabha states after delimitation : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா 2026 ( Delimitation Bill 2026 ) மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
புள்ளி விவரங்களோடு அமித் ஷா
விவாதத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ தென் மாநிலங்களின் அரசியல் பலம் குறையும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவர் புள்ளி விவரங்களுடன் மறுத்தார்.
தென் மாநில கணக்கீடு
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 816-ஆக (அல்லது 850 வரை) உயரும்.
இதன் மூலம் தென் மாநிலங்களின் இடங்கள் கணிசமாக அதிகரிக்கும், குறைய வாய்ப்பே இல்லை.
தமிழகம் 59 இடங்கள்
தமிழகத்தை பொருத்தவரை மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 39 இடங்களிலிருந்து 59 இடங்களாக உயரும். அதாவது 20 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
கர்நாடகா 42 இடங்கள்
கர்நாடகாவில் மக்கள் எம்பிக்களின் எண்ணிக்கை 28ல் இருந்து 42 இடங்களாக உயரும்.
கேரளா 30 இடங்கள்
கேரளாவில் 20 இடங்களிலிருந்து 30 இடங்களாக மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆந்திரா 38 இடங்கள்
ஆந்திரப் பிரதேசத்தில் 25 இடங்களிலிருந்து 38 இடங்களாக உயரும்.
தெலங்கானா 26 இடங்கள்
தெலங்கானா மாநிலத்தில் மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை 17ல் இருந்து 26 இடங்களாக அதிகரிக்கும்.
தென்மாநில பிரதிநிதித்துவம் அதிகரிப்பு
இதன் மூலம் தென் மாநிலங்களின் மொத்த பிரதிநிதித்துவம் தற்போதுள்ள 23.76% ல் இருந்து, 23.87% ஆக (சுமார் 24%) உயருமே தவிர, ஒரு சதவீதம் கூட குறைய கூட குறையாது.
தவறான தகவல் பரப்பப்படுகிறது
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு இந்த மசோதா தண்டனையாக அமையும் என ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் சுமார் 50% கூடுதல் இடங்கள் என்ற விகிதாசார முறை பின்பற்றப்படுவதால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது.
அனைத்து மாநிலங்களுக்கும் உயரும்
புதிய மசோதாவின் படி, அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை சுமார் 50% உயர்த்தப்படும்.
தற்போது 543 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் தமிழ்நாட்டின் பங்கு 7.18% ஆக உள்ளது.
புதிய திட்டத்தின்படி, 816 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் இது 7.23% ஆக அதிகரிக்கும்
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.76%-லிருந்து 23.87% ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2029 மக்களவை தேர்தலுக்கு அமல்
2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு வரை அனைத்துத் தேர்தல்களும் தற்போதுள்ள பழைய தொகுதிகளின் அடிப்படையிலேயே நடைபெறும்.
2029க்குப் பிறகே இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்” என்று அமித் ஷா உறுதியளித்தார்.
======================