Supreme Court Of India on Aadhaar ID Card in Indian Citizenship Documents 
இந்தியா

ஆதார் குடியுரிமை ஆவணம் கிடையாது : EC வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம்

Supreme Court on Indian Citizenship Documents : இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் நம்பகமான ஆவணமாக ஆதார் அடையாள அட்டையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Kannan

பிகார் சட்டசபை தேர்தல் :

Supreme Court on Indian Citizenship Documents : பிகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை(Bihar SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு :

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை :

இந்த மனுக்களை ஒன்றாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் குடியுரிமை ஆவணமாக ஏற்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது.

வாக்காளர் பட்டியலில் இருந்து மிகப்பெரிய அளவில் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.

ஆதார் குடியுரிமை ஆவணம் இல்லை :

உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், ஆதார், ரேஷன் அட்டை(Aadhaar & Ration Card) ஆகியவற்றை நம்பகமான ஆவணமாக ஏற்க முடியாது என உறுதிபடத் தெரிவித்தது. அதற்கான காரணத்தையும் தேர்தல் ஆணையம் விளக்கி இருந்தது.

ஆதார் - மும்பை உயர் நீதிமன்றம் கருத்து :

ஆதார் விவகாரத்தில் ஏற்கனவே மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து தங்கி இருக்கும் ஒருவர், ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டையை சமர்பித்தார். இவை முறைகேடாக பெறப்பட்டவை என்பது விசாரணையில் உறுதியானது.

மேலும் படிக்க : தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி: ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது

ஆதார், பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்திய குடிமகனாக்கி விடாது என்று இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. எனவே, ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக(Indian Citizenship Documents) ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம்(Supreme Court) ஏற்றுக் கொண்டது.

===