
வாக்காளர் பட்டியல், எதிர்க்கட்சிகள் புகார் :
Rahul Gandhi Arrest : வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. எனவே, தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும், அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
வாக்காளர் பட்டியல் முறைகேடு(Voter List) குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி நடத்தினர்.
ராகுல் காந்தி தலைமையில் பேரணி :
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi Rally) தலைமையில் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது :
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர்(INDIA Bloc) கலந்துகொண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செல்லும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தேசியவாததலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம்(Election Commission) நோக்கி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசாரை கண்டித்து, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் படிக்க : ராகுலின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு : ஆதாரம் கேட்கும் ஆணையம்
இதனிடையே, 30 எம்பிக்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதற்கான பட்டியலை டெல்லி காவல்துறையிடம் இந்தியா கூட்டணி வழங்கினால், அவர்கள் தேர்தல் ஆணையம் செல்ல அனுமதி வழங்கப்படும்.
=====