Supreme Court Of India on Stray Dog Menace in Delhi 
இந்தியா

’தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை’ : உச்ச நீதிமன்றம்

Supreme Court Of India on Stray Dog Menace in Delhi: டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: கெடுபிடியை தளர்த்திய உச்ச நீதிமன்றம்.

Kannan

Supreme Court Of India on Stray Dog Menace in Delhi : டெல்லியில் தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என கெடுபிடிகளை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

தெருநாய்கள் பிரச்சினை - விசாரணை :

நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள்(Rabies Disease) அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லியில் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களை(Stray Dog Issue in Delhi) பிடிக்கத் தொடங்க வேண்டும். அவற்றை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்.

நாய்களுக்கு காப்பகங்கள் :

டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இந்த நாய்களை வெளியே விடக்கூடாது, என உத்தரவிட்டனர்.

நாடு முழுவதும் எதிர்ப்பு - உத்தரவு மாற்றம்

இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. குறிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

காப்பங்களில் அடைக்க வேண்டாம் :

அதன்படி, “டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம்.

மேலும் படிக்க : காப்பகங்களில் அடையுங்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றம்(Supreme Court Order) தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

==========