Street Dogs - காப்பகங்களில் அடையுங்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு

Supreme Court on Delhi Street Dogs Issue : டெல்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்குமாறு, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Supreme Court Of India on Delhi Street Dog Issue
Supreme Court Of India on Delhi Street Dog Issue
1 min read

அதிகரிக்கும் நாய்த் தொல்லை :

Supreme Court on Delhi Street Dogs Issue : நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தெரு நாய்கள் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும், முதியோரும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கத்தால் பலர் இறக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர் :

* தலைநகர் டெல்லியில் சுற்றும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும்.

* உடனடியாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். இந்த உத்தரவை சமரசம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

* எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ இந்த செயல்முறையை எதிர்த்தால், அத்தகைய எதிர்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நாய் கடித்தால் ரேபிஸுக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை அவசியம்.

* தெருநாய்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் நகரங்களிலிருந்து பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பது அதிகாரிகள் தான் கவனிக்க வேண்டும்.

* அனைத்து பகுதிகளையும் தெருநாய்கள் இல்லாததாக மாற்றுவதற்கான முதல் மற்றும் முக்கிய முயற்சியாக இது இருக்க வேண்டும்.

* எங்கள் சுயநலத்திற்காக அல்ல, மாறாக மக்களுக்காக உத்தரவிடுகிறோம்.

* குழந்தைகள் எந்த நிலையிலும், வெறி நாய்க் கடிக்கு ஆளாகக் கூடாது. நடவடிக்கை மூலம், பயமின்றி அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும்.

* ஆறு வாரங்களுக்குள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தொடங்கி, 5,000 தெருநாய்களை அதிகாரிகள் பிடிக்கத் தொடங்க வேண்டும்.

மேலும் படிக்க : அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள் : உச்ச நீதிமன்றம் தானாக விசாரணை

* பிடிபடும் அனைத்து தெருநாய்களின் தினசரி பதிவை அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும்.

* நாய்க்கடி மற்றும் வெறி நாய் கடிக்கு ஒரு வாரத்திற்குள் ஒரு ஹெல்ப்லைன் உருவாக்கப்பட வேண்டும்.

* ரேபிஸ் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து விரிவான அறிக்கையை வழங்க வேண்டும். பிடிக்கப்படும் தெரு நாய்களை விதியை மீறி விடுவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in