Supreme Court Slams Rahul Gandhi On India China Border Dispute 
இந்தியா

Rahul Gandhi : சீன எல்லை விவகாரம் : ராகுலை கண்டித்த உச்சநீதிமன்றம்

Supreme Court on Rahul Gandhi : இந்திய சீன எல்லை விவகாரம் தொடர்பாக சமூக வலை தளங்களில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தமைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

MTM

Supreme Court on Rahul Gandhi : அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய மற்றும் சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டபோது இரு தருப்பு வீரர்களும் காயமடைந்தனர். அப்போது ,காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சீன ராணுவத்தால் இந்திய ராணுவம் தாக்கப்பட்டது என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து இந்திய ராணுவத்தின் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற ஒருவர் இந்திய எல்லைக்குள்ளான ஆக்கிரமிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என எப்படிக் கூறமுடியும் ? என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராகுல் காந்தி தனது கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை. மாறாக ஏன் அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் ?” என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்திய எல்லையில் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்தது என்பது ராகுல் காந்திக்கு எப்படி தெரியும்? எந்த உறுதியான தகவல் அடிப்படையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்? எல்லை தொடர்பான விவகாரத்தை ஒரு உண்மையான இந்தியர் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேச மாட்டார். பேச்சு சுதந்திரம் என்பதற்காக எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பேச முடியாது என்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க : ரஷ்யா, ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் : அச்சுறுத்திய சுனாமி அலைகள்

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்