
ரஷ்யாவில் நிலநடுக்கம் :
Russia Japan Tsunami Earthquake Update : ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு 8 புள்ளி என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சீனா, ஜப்பான், பெரு,அமெரிக்காவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதுபற்றி அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், 19.3 கி.மீ. ஆழத்தில், 1.65 லட்சம் பேர் வசிக்கும் அவச்சா நகரத்திற்கு, 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி :
நிலநடுக்கம் கடுமையாக இருந்ததால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் உருவாகி, ஆக்ரோஷமாக கரையை தொட்டன. பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பின.
தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பின.
இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை :
கம்சாத்கா தீபகற்பத்தை தாக்கிய சுனாமியால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல்(Tsunami in India) ஏதும் இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்ட நாடுகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : 12 நாட்களில் போர் நிறுத்தம் : புதினுக்கு ட்ரம்ப் இறுதிக்கெடு
1952ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி கம்சத்கா பகுதியை சக்தி வாய்ந்த நிலை நடுக்கம்(Powerful Earthquake) தாக்கியது. 9 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், 9.1 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பின. தீவுப் பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருந்ததால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
====