The CJP party, which is moving towards a real struggle, they will soon be returning to the field of struggle.  google
இந்தியா

நிஜ போராட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும்" cjp party" : விரைவில் களத்திற்கு வருவோம் எனவும் தெரிவிப்பு

இக்கட்சியானது ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான ஒரு இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது.

Rohini

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP)

இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் கட்சியானது தற்போது உருவாகியுள்ளது. இக்கட்சியானது, ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான ஒரு இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது.

உருவான சில தினங்களிலேயே இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் . இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை மில்லியனுக்கும் அதிகமானோர் சமூக வளைத்தஆள் பக்கத்தில் பின்தொடர்கின்றனர்.

ஆட்சி மீது விரக்தி அடைந்த கட்சி

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் வேலை செய்த அபிஜித் தீப்கே என்பவர் இந்தக் கட்சியை தொடங்கி இருக்கிறார்

பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாது

இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி கிடையாது என்றாலும், இளைஞர்களால் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கேளிக்கையான கட்சியாகும். ’மதச்சார்பற்ற - சோசலிச - ஜனநாயக - சோம்பேறி’ என்பதே இக்கட்சியின் கொள்கையாகும்.

நிஜ போரட்டத்தில் குதித்த CJP)

இந்த நிலையில் சமூக வளைதளம் முழுவதும் கவனம் பெற்று வரும் நிலையில் தற்போது இது நிஜ போரட்டத்தில் குதிக்க் இருக்கிறது . இணையத்தில் பல் தரப்பு சார்பாக கிண்டல் செய்யப்பட்ட கட்சியாக இருந்த வந்த நிலையில் தற்பொது , வீரியமிக்க கட்சியாகவும் போரட்டதிலும் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளது

நிர்வாகி டெல்லி திரும்பியதும் போரட்டம்

இந்த கட்சியை தொடங்கிய ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகியான அபிஜித் திப்கே, மேற்படிப்புக்காக அமெரிக்காவில் இருந்து வரும் நிலையில் , வரும் 6-ஆம் தேதி இந்தியா வந்து போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க : cjp party : கரப்பான்பூச்சி ஜனதா கட்சி;அரசியல் கட்சியாக அறிவிக்கவேண்டும் தேர்தல் ஆணையத்திடம் மனு

======================