cjp party : கரப்பான்பூச்சி ஜனதா கட்சி;அரசியல் கட்சியாக அறிவிக்கவேண்டும் தேர்தல் ஆணையத்திடம் மனு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
cjp party: Petition to the Election Commission to declare Karapanpoochchi Janata Party as a political party
cjp party: Petition to the Election Commission to declare Karapanpoochchi Janata Party as a political party google
1 min read

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP)

இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் கட்சியானது தற்போது உருவாகியுள்ளது. இக்கட்சியானது, ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான ஒரு இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது.

உருவான சில தினங்களிலேயே இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் . இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை மில்லியனுக்கும் அதிகமானோர் சமூக வளைத்தஆள் பக்கத்தில் பின்தொடர்கின்றனர்.

ஆட்சி மீது விரக்தி அடைந்த கட்சி

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் வேலை செய்த அபிஜித் தீப்கே என்பவர் இந்தக் கட்சியை தொடங்கி இருக்கிறார்

பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாது

இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி கிடையாது என்றாலும், இளைஞர்களால் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கேளிக்கையான கட்சியாகும். ’மதச்சார்பற்ற - சோசலிச - ஜனநாயக - சோம்பேறி’ என்பதே இக்கட்சியின் கொள்கையாகும்.

மேலும் இக்கட்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது

அரசியல் கட்சியாக அறிவிகப்பட வேண்டும்

டிஜிட்டல் அமைப்பான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக

அக்கட்சியின் தேசிய அமைப்பாளராகத் தன்னை அறிவித்து, ஹரியாணாவை சேர்ந்த வழக்குரைஞர் சுதீர் ஜாக்கர் (35) இந்த விண்ணப்பத்தை அளித்துள்ளார்

இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது

நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அரசியல் தளம் வழங்கப்பட வேண்டும். இதற்கு கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதே சிறந்த வழி.

இந்த அமைப்பை உருவாக்கிய அபிஜீத் தீப்கே தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்று தெரியவில்லை. எனவே அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையை நான் மேற்கொண்டேன் என்று கூறியுள்ளார்

உரிய அங்கீகாரத்தை பெறுமா இக்கட்சி

தனது முதல் மெய்நிகர் GenZ மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. தவிர, நீட் மற்றும் சிபிஎஸ்இ போன்ற தேர்வு மோசடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஆதரவாக நிற்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில இது வெறும் மீம்காக பேசப்படும் கட்சியா இருக்குமா அல்லது உரிய அங்கீகார்ம் பெறுமா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in