The Kerala High Court has issued an interim stay on the release of the film 'The Kerala Story 2 Release Date in Tamil google
இந்தியா

"The Kerala Story 2" : 'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படத்திற்கு இடைக்கால தடை : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

The Kerala Story 2 Release : சமீபத்தில் வெளிவந்த தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,அதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து இருக்கிறது

Rohini

பெரும் விவாதத்திற்குள்ளான தி கேரளா ஸ்டோரி பாகம் 1

Kerala High Court Interim Stay on The Kerala Story 2 Release Date : சுதீப்தோ சென் இயக்கத்தில் 2023இல் வெளியான இந்திப் படம் `The Kerala Story'. மாற்று மதத்தினரை, முஸ்லீம்களாக மாற்றுகின்றனர் என்ற பொது கருத்தை முன்மொழிந்து எடுக்கப்பட்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய விவாத பேச்சாக மாறி பெரும் கண்டங்களுக்கு ஆளானது.

பாகம் 2

தற்போது இத்திரைப்படத்தின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் ,அதிலும் வெறுப்பை தூண்டும் காட்சிகளாக. மேலும் இஸ்லாமிய பெண்கள் சேர்ந்து ஓர் இந்துப் பெண்ணின் வாயில் மாட்டிறைச்சியைத் திணிப்பது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

அந்தவகையில் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் திரைப்படத்திற்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது .திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனா நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கேரள முதல்வரின் பதிவு

இந்த திரைப்பட சர்ச்சையை அடுத்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இரண்டாம் பாகம் வெளியீடு குறித்த தகவல்களை மிகுந்த கவனத்துடன் நாம் பார்க்க வேண்டும்.

முதல் பாகத்திலே அப்பட்டமான பொய்களை பார்த்தோம். நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை சித்தரிக்கும் எதுவாக இருந்தாலும் அதை கேரளா அரசு நிராகரிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க :வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி 2' ட்ரெய்லர் : முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு