திருமலை ஏழுமலையான் கோவில் :
FASTag Mandatory for Vehicles in Tirumala Temple : திருமலையில் குடி கொண்டிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் பேருந்து, ரயில் அல்லது விமானத்தில் திருப்பதி வரை வருகின்றனர். அங்கிருந்து திருமலைக்கு பேருந்துகள் அல்லது கார், ஜீப், வேன் போன்றவற்றின் மூலம் செல்கின்றனர். மேலும் பலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமும் குடும்பத்தாருடன் திருமலைக்கு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்று திரும்புகின்றன.
ஃபாஸ்டேக் கட்டாயம் உத்தரவு :
இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் கண்டிப்பாக அவர்களின் வாகனங்களில் ஃபாஸ்டேக்(Fastag Mandatory in Tirupati) இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் இல்லா விட்டால் அனுமதியில்லை :
”பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அலிபிரி சோதனைச்சாவடி(Alipiri Toll Gate) வழியாக திருமலைக்கு கார், ஜீப், வேன்களில் செல்லும் போது ஃபாஸ்டேக் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது வரும் 15ம் தேதி முதல்(Tirumala Fastag Mandatory Date) அமல்படுத்தப்பட உள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.
மேலும் படிக்க : திருப்பதி ‘ஏழுமலையான் லட்டு’ : ஆக.2 ( இன்றுடன்) 310 ஆண்டுகள்
ஃபாஸ்டேக் விநியோக மையம் :
பக்தர்கள் வசதிக்காக அலிபிரி சோதனைச்சாவடி(Alipiri Toll Plaza) அருகே ஐசிஐசிஐ வங்கியின் ஃபாஸ்டேக்(ICICC Fastag Centre) விநியோக மையமும் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஃபாஸ்டேக் பெற்று கொண்ட பின்னரே அந்த வாகனம் திருமலைக்கு அனுமதிக்கப்படும்” இவ்வாறு தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
=====