TTD Tirupati Tirumala Brahmotsavam 2025 Dates Schedule Latest Update in Tamil 
இந்தியா

Brahmotsavam : ஏழுமலையான் கோவில் அலங்காரத்திற்கு 60 டன் மலர்கள்

TTD Tirupati Tirumala Brahmotsavam Dates 2025 : திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழாவுக்காக 60 டன் மலர்களைக் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன.

Kannan

திருப்பதி பிரம்மோற்சவம் :

TTD Tirupati Tirumala Brahmotsavam Dates 2025 : 2025ம் ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்திற்காக, பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் முழு வீச்சில் தயாராகி வருகிறது. வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம்(TTD Brahmotsavam 2025 Date) தொடங்குகிறது. அக்​டோபர் 2-ம் தேதி வரை கோலாகல​மாக விழா நடை​பெற உள்​ளது. ஆந்திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு 24ம் தேதி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்குவார். இதையடுத்து, அன்று மாலை கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்​சவம் தொடங்​கு​கிறது.

ரூ.3.5 கோடி, 60 டன் மலர் அலங்காரம் :

அடுத்த தினம், திருமலையில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு பணிகளை முதல்வர் திறந்து வைப்பார். மின் விளக்குகளால் திருமலையை அழகுபடுத்த ரூ.5.5 கோடி​யும், மலர் அலங்​காரத்​துக்​காக ரூ. 3.5 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 60 டன் மலர்​களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்ட இருக்கின்றன. இதற்காக நாடு முழுவதும் இருந்து திறமையான கலைஞர்கள் திருப்பதிக்கு(Tirupati Temple) வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் :

நேரடி​யாக திரு​மலைக்கு வரும் பக்​தர்​களுக்​காக 3,500 தங்​கும் அறை​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன. திரு​மலை​யில் 36 எல்​.இ.டி தொலைக்​காட்​சிகள் மூலம் பிரம்மோற்சவ விழா(Tirupati Brahmotsavam Darshan Ticket) பக்தர்கள் காண ஏற்​பாடு செய்​யப்​பட்​ கருட சேவையன்று தவிர, நாள் ஒன்​றுக்கு 1.16 லட்​சம் சிறப்பு தரிசன டிக்​கெட்​டு​கள், மற்​றும் 25 ஆயிரம் சர்வ தரிசன டிக்​கெட்​டு​கள் விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன.

தினமும் 8 லட்சம் லட்டுகள் விநியோகம் :

சாமானிய பக்​தர்​களுக்கு முன்​னுரிமை வழங்க முடிவு செய்​யப்​பட்​டு, விஐபி பிரேக் தரிசன முறை ரத்து(VIP Darshan in Tirumala) செய்​யப்​பட்​டிருக்​கிறது. மூத்த குடிமக்​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு தரிசனங்​களும், ஆர்​ஜித சேவை டிக்​கெட்​டு​களும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. தின​மும் 8 லட்​சம் லட்டு பிர​சாதங்​கள் வழங்​கப்பட உள்​ளன. 20 உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

பக்தர்களுக்கு 14 வகையான உணவுகள் :

கருட சேவையன்று மாட வீதி​களில் வாகன சேவையை காண திரண்​டிருக்​கும் பக்​தர்​களுக்கு 14 வகை​யான உணவு​களை விநி​யோகம் செய்ய ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தின​மும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பக்​தர்​களுக்கு மாத்ரு ஸ்ரீ வெங்​க​மாம்​பாள் அன்​ன​தான சத்​திரத்​தில் இலவச அன்​ன​தானம் வழங்​கப்​படும்(TTD Brahmotsavam Foods). தின​மும் 1,900 தடவை திரு​மலை-​திருப்​பதி இடையே ஆந்​திர அரசு பேருந்​துகள் இயக்​கப்​படும். கருட சேவை​யான 28-ம் தேதி 3,200 தடவை​கள் பேருந்​துகள் இயக்​கப்​படும்.

இவ்வாறு பிரமாண்ட ஏற்பாடுகளுடன் திருப்பதி பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது. பூலோக வைகுண்டமான திருமலையில் நடைபெறும் இந்த வைபவத்தை 9 நாட்களும் நேரில் காண முடியாவிட்டாலும், TTD தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டு பெருமாளை சேவிக்கலாம்.

பிரம்மோற்சவ விழா அட்டவணை(TTD Brahmotsavam Dates 2025 Schedule) :

செப்டம்பர் 24 - மாலையில் கொடியேற்றம்

செப்டம்பர் 25 - காலையில் சின்ன சேஷ வாகனம், மாலை ஹம்ச வாகனம்

செப்டம்பர் 26 - காலையில் சிம்ம வாகனம், மாலை முத்துபல்லக்கு வாகனம்

செப்டம்பர் 27 - காலை கற்பவிருட்ச வாகனம், மாலை சர்வ பூபால வாகனம்

செப்டம்பர் 28 - மோகினி அவதாரம், மாலை கருட சேவை

செப்டம்பர் 29 - அனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு கஜ வாகனம்

மேலும் படிக்க : திருப்பதியில் செப்.24 முதல் பிரம்மோற்சவம் : 28ம் தேதி ’கருடசேவை’

செப்டம்பர் 30 - காலை சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம்

அக்டோபர் 01 - காலை ரத உற்சவம், மாலை அஸ்வ வாகனம்

அக்டோபர் 02 - சக்ர ஸ்நானனம், அன்றிரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு

=============