திருப்பதியில் செப்.24 முதல் பிரம்மோற்சவம் : 28ம் தேதி ’கருடசேவை’

TTD Tirupati Tirumala Brahmotsavam Dates 2025 : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
TTD Tirupati Tirumala Brahmotsavam Dates 2025 Garuda Seva in Tamil
TTD Tirupati Tirumala Brahmotsavam Dates 2025 Garuda Seva in Tamil
2 min read

திருப்பதி ஏழுமலையான் கோவில் :

TTD Tirupati Tirumala Brahmotsavam Dates 2025 : உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கானோர் வந்து, இறைவனை தரிசிக்கின்றனர். பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை பொருத்துவரை உலக அளவில் அதிக தொகை கிடைக்கும் கோவிலாகவும் திருப்பதி உள்ளது.

வருடாந்திர பிரம்மோற்சவம் :

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் மிகவும் புகழ் பெற்றது வருடாந்திர பிரம்மோற்சவம்(Tirupati Brahmotsavam Flag Hoisting). கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பிரம்மனால் நடத்தப்படுவது பிரம்மோற்சவம் :

திருப்பதி பிரம்மோற்சவம் என்பது திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மனால் முதன்முதலாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளிப்பார் . கருட வாகனம்(Garuda Seva), சேஷ வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

24ம் தேதி கொடியேற்றம் :

பிரம்மோற்சவத்திற்கு முன்னோட்டமாக வரும் 16ம் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெறும். தொடர்ந்து 23ம் தேதி மாலை அங்குரார்ப்பணம், விஷ்வசேனாதிபதி உற்சவம் நடைபெறும். 24ம்தேதி மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும்(Tirupati Brahmotsavam Flag Hoisting 2025 Date And Time). இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி வீதியுலா இருக்கும்.

பிரம்மோற்சவ அட்டவணை(TTD Brahmotsavam Schedule 2025) :

24-09-2025 - இரவு - பெரிய சேஷ வாகனம்

25-09-2025 --- காலை - சின்ன சேஷ வாகனம் : இரவு - ஹம்ச வாகனம்

26-09-2025 - காலை - சிம்ம வாகனம் : - இரவு: - முத்துப் பல்லக்கு சேவை

27-09-2025 - காலை - கல்ப வ்ருக்ஷ வாகனம் : இரவு - சர்வ பூபால வாகனம்

28-09-2025 - காலை - மோகினி அவதாரம் : இரவு - கருட வாகனம்

29-09-2025 - காலை - ஹனுமந்த வாகனம் : இரவு - கஜ வாகனம்

30-09-2025 - காலை - சூர்ய பிரபை வாகனம் : இரவு - சந்திர பிரபை வாகனம்

01-10-2025 - காலை - ரதோத்சவம் ( தேர் திருவிழா ) - இரவு - அஸ்வ வாகனம்

02-10-2025 - காலை - சக்ர ஸ்நானம் - இரவு பிரம்மோற்சவம் நிறைவு

பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம்(TTD Brahmotsavam 2025) முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க : திருமலையில் ’AI தொழில்நுட்பம்’ : 2 மணி நேரத்தில் பெருமாள் தரிசனம்

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in