மத்திய அமைச்சர் அதிரடி :
Minister Ashwini Vaishnavi Welcomes Arattai Messenger App : டெல்லி: ரயில்வே துறையில் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் பிளாட்பார்ம்களை பயன்படுத்துவதற்கு பதில் இந்தியாவின் ஜோஹோ நிறுவனத்தின் பிளாட்பார்ம்களை பயன்படுத்த உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடியாக அறிவித்துள்ளார். உள்ளூர் பொருட்களுகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வைத்த கோரிக்கையை ஏற்று அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்தது மற்றும் எச் 1பி விசாவின் கட்டணத்தை உயர்த்தி இந்திய ஐடி ஊழியர்களை அமெரிக்காவுக்கு செல்வதை தடுத்து பல்வேறு சிக்கல்களை உறுவாக்கிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இந்த மாற்றத்தை கையில் எடுத்துள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் பதிவு :
இதுதொடர்பாக மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛நான் ஜோஹோவை நோக்கி நகர்கிறேன். எனது டாக்குமென்ட்ஸ், ஸ்பிரிட்ஷீட் மற்றும் பிரசென்டேஷன் உள்ளிட்டவர்களுக்கு ஜோஹோ நிறுவனத்தின் பிளாட்பார்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.
அதேபோல் பிரதமர் மோடியின் சுதேசி(Swedeshi India) அழைப்பில் அனைவைரும் சேர்ந்து இந்திய தயாரிப்பு மற்றும் சேவைகளை பயன்படுத்த வேண்டும்'' எனவும் கேட்டுகொண்டார்.
ஜோஹோ நிறுவனர் நன்றி :
இவரின் இந்த பதிவிற்கு ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு(Sridhar Vembu) நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛"நன்றி சார், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் எங்கள் இன்ஜினியர்களுக்கு பெரிய மன உறுதியை வழங்கும். நாங்கள் உங்களைப் பெருமைப்படுத்துவோம்.
மேலும் படிக்க : சோசியல் மீடியாவில் முதலிடம் பிடிக்கும் அரட்டை! ஜோஹோ அசத்தல்!
நம் தேசத்தை பெருமைப்படுத்துவோம். ஜெய் ஹிந்த்" என்று கூறியுள்ளார்.அமெரிக்க செய்த திருப்பங்களுக்கு, இந்தியா தனது தொடர் நேர்த்தியான பதிலடிகளை பல்வேறு விதமாக வழங்கி வருகின்றது.அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் இந்த முடிவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், கருத்துக்களையுடம் பதிவிட்டு வருகின்றனர்.