Union Minister Giriraj Singh said, NDA alliance moves huge victory in Bihar elections, our next target is win in West Bengal Google
இந்தியா

“அடுத்த வெற்றி இலக்கு மேற்கு வங்கம் தான்” : அமைச்சர் கிரிராஜ் சிங்

Bihar Assembly Election 2025 Results : பிகார் தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும் வெற்றியை நோக்கி நகரும் நிலையில், அடுத்த இலக்கு மேற்கு வங்க வெற்றிதான் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்

Kannan

என்டிஏ அபார வெற்றி!

Bihar Assembly Election 2025 Results : பிகார் சட்டமன்ற தேர்தலில் அனைத்து கணிப்புகளையும் முறியடித்து, 190 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

BJP, JDU ஆதிக்கம்

பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 100 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தலா 80 தொகுதிகளில் வரை முன்னிலை வகிக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட அந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற இருக்கிறது.

பிகார் மக்கள் - தெளிவான தீர்ப்பு

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ” பிகார் மக்கள் காட்டாட்சியை எப்போதும் விரும்ப மாட்டார்கள். ஊழல் தலைவர்களிடம் பிகாரை ஒப்படைக்க அவர்கள் தயாராக இல்லை. பிகார் வெற்றி நம் வசம் இருக்கிறது. அடுத்த இலக்கு மேற்கு வங்கம் தான்.

மேற்கு வங்கமே அடுத்த இலக்கு

அடுத்த ஆண்டு நடைபெறும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக இதேபோன்று வெற்றிக் கனியை பறிக்கும். தற்போதைய ஆட்சியாளர்கள் அராஜக போக்கை பின்பற்றி வருகின்றனர். அதனால் மேற்கு வங்க மக்களின் ஆதரவும் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

வளர்ச்சியில் பிகார் மாநிலம்

வளர்ச்சி, சமூக நல்லிணக்கமே, பிகார் தேர்தலில் என்டிஏ வெற்றிக்கு காரணம். முன்னேற்றத்தின் வெளிப்பாட்டினை மக்கள் வாக்குச் சீட்டு மூலம் பதிலளித்து இருக்கிறார்கள். பிகார் இளைஞர்கள் புத்திசாலிகள். சரியான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்" இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

===============