

பிகார் தேர்தல் முடிவுகள்
Bihar Assembly Election Results 2025 Update in Tamil : பிகார் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. முன்னணி நிலவரத்தை பார்க்கும் தேர்தல் கருத்து கணிப்புகளை விஞ்சி, முடிவுகள் எனத் தெரிகிறது.
180 தொகுதிகளுக்கு மேல் NDA
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 180க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவையும் தாண்டி, இந்தக் கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிகிறது. தேர்தல் கருத்து கணிப்புகளையும் மிஞ்சி JDU - BJP கூட்டணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
படுதோல்வியை நோக்கி மகாகத்பந்தன்
அதேசமயம் மகாகத்பந்தன் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பிரசாரத்தின் போது முதல்வர் நிதிஷ்குமாரை விட ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு அதிக ஆதரவு இருந்தது. ஆனால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டியது.
இதன் பாதிப்பு வாக்கு எண்ணிக்கையில் எதிரொலித்து இருக்கிறது. 50க்கும் குறைவான தொகுதிகளில் தான் இந்தக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆர்ஜேடி 35 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
பிரசாந்த், ஓவைசி
ஜன்சுராஜ் கட்சியை சேர்ந்த பிரசாந்த் கிஷோர், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. தொடக்கத்தில் ஒரு சில தொகுதிகளில் முன்னிலையில் இருந்த ஜன்சுராஜ் எங்கும் வெற்றி பெறாத நிலையில் உள்ளது. அதேசமயம் இந்த இரு கட்சிகளும் மகாகத்பந்தன் கூட்டணி வெற்றியை பறித்து விட்டன என்றே சொல்ல வேண்டும்.
இந்தியா கூட்டணி - வெற்றி பறிப்பு
இந்தியா கூட்டணியின் பலம் என்பதே சிறுபான்மையின வாக்குகள் தான். 25 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஓவைசி, இஸ்லாமிய வாக்குகளை பிரித்து விட்டார். இதன் காரணமாக மகாகத்பந்தன் கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பிரசாந்த் கிஷோர், ஓவைசி பிரித்து மகாகத்பந்தன் கூட்டணியை படுபாதளத்தில் தள்ளி இருக்கிறார்கள். அதேசமயம் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்ததால், அனைத்து கருத்துக் கணிப்புகளையும் மீறி என்டிஏ கூட்டணி பெரிய வெற்றியை பெற இருக்கிறது.
====