Union Minister Pralhad Joshi on SIR : பிகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (SIR) பணி குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள் குறித்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேட்டியளித்தார்.
நாட்டில் SIR முதல் முறையாக நடைபெறவில்லை... இந்த முறை, தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் எதற்கு பயப்படுகிறார்கள்? மூன்று நிலை மேல்முறையீட்டு வாய்ப்பு உள்ளது, அதை அவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் தடுப்பது தவறு என்று ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து SIR பணிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டிய அவர், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் கேஏஜி உள்ளிட்ட அரசியலமைப்பு நிறுவனங்களில் நம்பிக்கை அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர்கள் முதலில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் கோரினர், நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம். அதற்கு முன்பு, அவர்கள் ஒரு முழு வாரத்தை வீணடித்தனர். இப்போது மீண்டும் இதையே செய்கிறார்கள் என்றும் ஜோஷி கூறினார்.
மேலும் படிக்க : SIR: இந்தியர்களுக்கே வாக்குரிமை, உறுதி செய்வதில் என்ன தவறு? : பாஜக
ஆனால், காங்கிரஸ் எம்.பி. மொஹம்மது ஜவைத், பிகாரில் வாக்காளர் பட்டியலில் சுமார் 65 லட்சம் பேர் குறைந்தது குறித்து கேள்வி எழுப்பினார், மேலும் மாநிலத்திற்கு வெளியே பணிபுரியும் மக்கள் சரிபார்ப்பு செயல்முறைக்காக படிவங்களை நிரப்பத் தவறியிருக்கலாம் என்று கூறினார்.
மேலும் பிகாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 65 லட்சம் பேர் குறைந்தது எப்படி? பிகாரைச் சேர்ந்த சுமார் மூன்று கோடி மக்கள், குறிப்பாக ஏழைகள், வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் படிவங்களை நிரப்ப முடியாமல் போயிருக்கலாம். ஆதார் அட்டை கருத்தில் கொள்ளப்படாது என்று நீங்கள் கூறியது நியாயமற்றது என்றும் தெரிவித்தார்.