யுபிஐ பரிவர்த்தனை அதிகரிப்பு :
UPI Transaction Limit : NPCI (National Payments Corporation of India) : இந்தியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் டிஜிட்டல் பேமென்ட் முறையான யுபிஐ பரிவர்த்தனை நாளுக்குநாள் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. 2016ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட யுபிஐ சேவை(UPI Origin Date), குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடைபாதை கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை பணத்தை விட யுபிஐ பரிவர்த்தனையை வணிகர்களும், பொதுமக்கள் விரும்புகின்றனர்.
யுபிஐ உச்சவரம்பு அதிகரிப்பு :
இந்தநிலையில், தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பினை அதிகரிப்பதாக என்பிசிஐ ( NPCI ) அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய தேசிய கட்டணம் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.இது தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அந்த வகையில் மூலதன சந்தையில் முதலீடு செய்தல், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் செலுத்த முடியும்
* ரூ.10 லட்சம் வரையிலான அதிகபட்ச பரிவர்த்தனையை 24 மணி நேரத்தில்(UPI Transaction List Per Day) செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
* கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை செலுத்தலாம்.
* கடன் மற்றும் மாதத் தவணைக்கான வரம்பு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அதிகரிப்பு
* நகைகளை வாங்க யுபிஐ மூலம் பயனர்கள் ஒரு நாளைக்கு ரூ.6 லட்சம் செலுத்த முடியும்
* வங்கி டெபாசிட், கால வைப்புக்கான வரம்பு பரிவர்த்தனை ரூ .5 லட்சமாக அதிகரிப்பு
* தனிநபரிடம் இருந்து பரிவர்த்தனைகளுக்கான வரம்பு, முன்பு போலவே நாளென்றுக்கு ரூ.1 லட்சமாகவே(UPI Transaction List Per Person) இருக்கும்
* மருத்துவ கட்டணம், கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே உள்ளது போல ரூ.5 லட்சமாகவே தொடரும்.
மேலும் படிக்க : UPI: 192 நாடுகளில் யுபிஐ பரிவர்த்தனை: இந்தியாவின் அசத்தலான திட்டம்
15ம் தேதி முதல் அமல்
இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி, வணிகர்களுக்கும் நல்ல பயனளிக்கும் என குறிப்பிட்டுள்ள என்பிசிஐ, இந்த நடைமுறை 15.09.2025 ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும்(UPI Transaction Limit Effective Date) என்றும் தெரிவித்துள்ளது.
============