UPI: 192 நாடுகளில் யுபிஐ பரிவர்த்தனை: இந்தியாவின் அசத்தலான திட்டம்

India Plan to Launch UPI Payments in 192 Countries : யுபிஐ பணப் பரிவர்த்தனையை 192 நாடுகளில் மேற்கொள்ளும் திட்டத்தை இந்தியா அறிமுகம் செய்து இருக்கிறது.
India Plan to Launch UPI Payments in 192 Countries in Tamil
India Plan to Launch UPI Payments in 192 Countries in Tamil
1 min read

டிஜிட்டல் பேமண்ட் - இந்தியா வளர்ச்சி

India Plan to Launch UPI Payments in 192 Countries : இந்தியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் டிஜிட்டல் பேமென்ட் முறையாக யுபிஐ பண பரிவர்த்தனை மாறி இருக்கிறது. யுபிஐ சேவை முறை 2016ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. நாள்தோறும் விரிவடைந்து வரும் இதன் சேவை, குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடைபாதை கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை பணத்தை விட யுபிஐ பரிமாற்றதையே வணிகர்களும், பொதுமக்கள் விரும்புகின்றனர்.

எளிமையாக பணப் பரிவர்த்தனை

இரு வங்கி கணக்குகள் இடையே உடனடியாக பண பரிவர்த்தனையை யுபிஐ அனுமதிக்கிறது. இதன் மூலம் உடனடி பண பரிவர்த்தனைகளை 24 மணி நேரமும் செய்யலாம். வங்கி கணக்கு விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், செல்போன் எண், வாடிக்கையாளரின் இ-மெயில் முகவரி மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடியும்.

யுபிஐ பரிவர்த்தனை சாதிக்கும் இந்தியா :

கடந்த மாதத்தில் யூபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 20.01 பில்லியனை எட்டியது. இது புதிய சாதனையாகும். ஆண்டு அடிப்படையில் ஒப்பிடும் போது, 34 சதவீத வளர்ச்சியை எட்டி உள்ளது. சராசரி தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 64.5 கோடியாக உயர்ந்தது.

மேலும் படிக்க : UPI புதிய சாதனை : ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை

192 நாடுகளுக்கு விரிவாக்கம்

UPI–UPU(Universal Postal Union) Integration Project : இந்தநிலையில், 192 நாடுகளில் யுபிஐ பண பரிவர்த்தனை சேவையை விரிவாக்கம் செய்யும் ஒருங்கிணைப்பு திட்டதை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. துபாயின் நடைபெற்ற உலகளாவிய போஸட்ல் காங்கிரஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, UPI–UPU ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் 192 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். குறைந்த கட்டணத்தில் பணப் பரிவர்த்தனைகளை எளிதில் மேற்கொள்ள இதில் வழி வகுக்கும்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in