SBI Funds Management on America China Trade War 
இந்தியா

அமெரிக்க - சீன வர்த்தகப் போருக்கு காரணம்? : நிதி மேலாண்மை அறிக்கை

America China Trade War: சமீபத்திய உலகளாவிய வர்த்தக போர்கள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம், நாடுகளுக்கிடையிலான சமமற்ற வர்த்தக நிலைதான் என எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது

MTM

America China Trade War : எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்(SBI Funds Management), அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான பதற்றங்கள், ஆழமான பொருளாதார வேறுபாடுகளால் ஏற்படுவதாகவும், இது தட்டுப்பாடான வர்த்தகப் பெருக்கங்களை உருவாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வரிகள் குறித்த பிரச்சனை, அமெரிக்கா-சீனா இடையிலான(America China Trade War) ஆழமான பொருளாதார சமமற்ற நிலையை பிரதிபலிக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா சீனா வர்த்தகப் போர் :

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் முதலீடு 42 சதவீதமாகவும், குடும்பச் செலவு: 40 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் அது முறையே 22 மற்றும் 68 என்றுள்ளது. இந்தியாவில் முறையே 33 மற்றும் 62 ஆக உள்ளது.

இந்த வேறுபாடுகள், நாடுகளுக்கிடையே பெரும் வர்த்தகக் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளன. இதுதான் பல நாடுகள் தங்கள் வரிகளை உயர்த்த வேண்டிய நிலைக்குச் செல்ல காரணமாகியுள்ளது.

அமெரிக்கா, தனது பொருளாதார சமமற்ற நிலையை சரிசெய்ய வரிகள், சட்ட வழிகள் போன்றவற்றை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. டோனால்ட் டிரம்ப்(Donald Trump) நிர்வாகம், சீனாவின் தொழில்துறை பொருட்களை சார்ந்திருப்பதை குறைக்க விரும்புகிறது.

சீனாவும், அமெரிக்கா(US vs China Trade War) மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இது

இது ஒரு தற்காலிகமான பிரச்சனை அல்ல, உலக பொருளாதார கட்டமைப்பில் ஒரு அடிப்படை மாற்றமாக இது உள்ளது, மேலும் இது வரும் ஆண்டுகளிலும் தொடரலாம் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கிடைக்காது, கிடைக்காது “நோபல் பரிசு” : டொனால்டு ட்ரம்ப் விரக்தி