
இந்தியா - பாகிஸ்தான் போரை தான்தான் நிறுத்தியதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
பல நாடுகளில் பதற்றத்தை தணிக்க தான் உதவி இருப்பதாகவும் அவர் தெரிவித்து வருகிறார்.
அப்படி இருந்தாலும் தனக்கு தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என்பது அவரது வேதனையாக இருக்கிறது.
இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப்," காங்கோ ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் இருநாட்டு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டன் வருகிறார்கள்.
ஆப்பிரிக்காவுக்கும் உலகிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதால் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
செர்பியா - கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியதால் எனக்கு போர் நோபல் பரிசு கிடைக்காது.
மத்திய கிழக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்ட எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் உள்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
எது எப்படி இருந்தாலும், என்னுடைய பணி குறித்து மக்களுக்கு தெரியும். அதுவே எனக்கு முக்கியம்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியது, சமூக வலை தளங்களில் விமர்சிக்கப்பட்டது.
======