வரி போரில் அதிபர் டிரம்ப் :
Donald Trump on US Lost India Russia to China : அதிபராக பதவியேற்றதில் இருந்து உலக நாடுகளை சீண்டிப் பார்த்த டொனால்ட் டிரம்ப், ஒரு கட்டத்தில் வரி விதிப்பு என்ற சாட்டையை சுழற்றினார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்திய அவர், இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்து கடும் எதிர்ப்பை சம்பாதித்தார்.
பொய்த்துப் போன டொனால்ட் டிரம்பின் கணக்கு :
இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி விடும், அமெரிக்கா சொல்வதை கேட்கும் என்று அவர் போட்ட கணக்கு பொய்த்து போனது. சலசலப்புக்கு அஞ்சாத பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, சீனாவுக்கு ஆதரவு கரம் நீட்டினார்.
பதிவிட்டு பதறும் அமெரிக்கா :
சில தினங்களுக்கு முன்பு சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்(SCO Summit) அவர் கலந்து கொண்டது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து பேசியது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக பார்க்கப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.
இந்தியாவை இழந்து விட்டோம் - டிரம்ப் :
இந்தநிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டெரூத் சமூக கணக்கில் (Truth Social account) வெளியிட்ட பதிவில், ” தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO Summit 2025) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக நடந்து செல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
"சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டது" அமெரிக்கா(America Lost India Russia to China) என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க : SCO Summit 2025: அதிபர் புதினை சந்தித்ததில் மகிழ்ச்சி-பிரதமர் மோடி
வருத்தத்துடன் வாழ்த்திய டிரம்ப் :
"நாம் இந்தியாவையும் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கட்டும்!" என்று டொனால்ட் டிரம்ப் தனது பெயருடன் செய்தியில் கையெழுத்திட்டு எழுதி இருக்கிறார்.
பதற்றத்தின் பிடியில் அமெரிக்கா :
இந்தியா - சீனா - ரஷ்யா கைகோர்த்து இருப்பது அமெரிக்காவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதையே இந்தப் பதிவு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்
=====