
ஷாங்காய் உச்சி மாநாடு :
PM Narendra Modi in SCO Summit 2025 : இரண்டு நாள் பயணமாக சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உள்பட, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.
அமெரிக்காவுக்கு செக் வைக்கும் இந்தியா :
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எச்சரிக்கையும் விடுக்கும் வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்(Shanghai Manadu) போது, பிரதமர் நரந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
உலகத் தலைவர்களுடன் சந்திப்பு :
ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவுகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று தலைவர்கள் இடையே நடைபெற்ற சந்திப்பு இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் இருக்கிறது.
புதினுடன் மோடி சந்திப்பு :
ஷாங்காய் மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. அத்தகைய சூழலில் மோடி - புதின் சந்திப்பு(PM Modi Vladimir Putin Meet), முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வரி விதிப்பு பற்றி ஆலோசனை :
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் குறித்து புதினிடம், பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது, இந்திய பொருட்களை கூடுதலாக ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வது பற்றியும் இருவரும் ஆலோசித்தனர்.
மேலும் படிக்க : கூடுதல் வரி விதிப்புக்கு தடை : டிரம்ப் பிடிவாதம், மேல்முறையீடு
புதினை சந்தித்ததில் மகிழ்ச்சி :
இந்த சந்திப்பு தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. ''ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் போல மகிழ்ச்சி அளிக்கிறது'' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
=======