US President Donald Trump on Google Microsoft Apple Hiring Indians 
இந்தியா

’இந்தியர்களை’ வேலைக்கு எடுக்கக் கூடாது : அதிபர் ட்ரம்ப் மிரட்டல்

Donald Trump on Google Microsoft Hiring Indians : இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது. அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு, அதிபர் டோனால்ட் டிரம்ப் மிரட்டல்.

Kannan

தொடர் சர்ச்சையில் ட்ரம்ப் :

Donald Trump on Google Microsoft Hiring Indians : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற நாளில் இருந்து டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களை கையில் எடுத்து வருகிறார். வரி என்கிற பெயரில் அவர் கொண்டு வந்த கடுமையான திருத்தங்கள் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. எனவே, கூடுதல் வரிவிதிப்புகளை ஆகஸ்டு 1ம் தேதி வரை நிறுத்தி வைத்திருக்கிறார் டோனால்ட் டிரம்ப். தன்மீதான விமர்சனங்களை மடை மாற்றும் வகையில் நேற்று முன்தினம் மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவில் பூகம்பத்தை கிளப்பினார். வெள்ளையர்களுக்கும் கருப்பின மக்களுக்கும் இதனால் மோதல் ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்து இருக்கிறது.

ஏ.ஐ. மாநாட்டில் டர்ம்ப் அதிரடி :

இந்தநிலையில், வாஷிங்டனில் நடந்த ஏ.ஐ., மாநாட்டில்(Donald Trump AI Maanadu) பங்கேற்ற டோனால்ட் டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பணியாளர் தேர்வு குறித்து அறிவுறுத்தலை வழங்கினார். அப்போது, பேசிய அவர், ஆப்பிள், கூகுள் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை கட்டுகின்றன. இந்தியாவில் இருந்து ஊழியர்களை நியமிக்கின்றன(Hiring Indians). அயர்லாந்தில் லாபத்தை சேர்க்கின்றனர். ஆனால் அமெரிக்க தொழிலாளர்கள் புறக்கணிக்கின்றன.

மேலும் படிக்க : 'மார்ட்டின் லூதர் கிங் பைல்ஸ்’ : புயலை கிளப்பிய அதிபர் ட்ரம்ப்

நிறுவனங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை :

அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முன்னணி நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டுகின்றன. ஆனால், வெளிநாடுகளிலேயே அதிக முதலீட்டை செய்கின்றன. இனி அது நடக்காது. எனவே, அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை கட்டுவதையும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும்(Donald Trump on Indian Techies) விட்டு விட்டு, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் “இவ்வாறு டோனால்ட் ட்ரம்ப் கண்டிப்புடன் பேசினார்.

====