'மார்ட்டின் லூதர் கிங் பைல்ஸ்’ : புயலை கிளப்பிய அதிபர் ட்ரம்ப்

Donald Trump on Martin Luther King Files : கடும் எதிர்ப்புக்கு இடையே "மார்ட்டின் லூதர் கிங் பைல்ஸ்" ஆவணங்களை வெளியிட்டு, அமெரிக்காவில் அடுத்த புயலை கிளப்பி இருக்கிறார் அதிபர் டோனால்ட் ட்ரம்ப்.
US President Donald Trump on Martin Luther King Files
US President Donald Trump on Martin Luther King Files
2 min read

கொடுமைப்படுத்தப்பட்ட கருப்பின மக்கள் :

Donald Trump on Martin Luther King Files : உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களில் ஒருவர் மார்ட்டின் லூதர் கிங். அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறை இருண்ட வரலாற்றைக் கொண்டது. 17ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்கள் ஆடு, மாடுகளை அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டனர். தோட்டங்களில் அடிமை தொழிலாளர்களாக கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர். அதேசமயம் அவர்களின் உழைப்புதான் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.

போராட்டங்களை முன்னெடுத்த மார்ட்டின் லூதர் :

தொடர் போராட்டங்கள், சட்டத் திருத்தங்கள் மூலம், 1865ல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. எனினும் கருப்பின மக்கள் மீதான அடக்குமுறை வேறுவேறு வழிகளில் தொடர்ந்தது. கொடுமைகளை கண்டு கொதித்து எழுந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர்(Martin Luther King Jr). நிறவெறிக்கு எதிராகவும், கருப்பின மக்களின் சம உரிமைக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தார். அகிம்சை வழியில் உரிமைகளுக்காக அவர் முன்னெடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கத் தொடங்கியது.

கருப்பின மக்களை தட்டி எழுப்பினார் :

இதனால் அச்சமடைந்த ஆட்சியாளர்கள் மார்ட்டின் லூதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து கருப்பின மக்களுக்கு அவர் எழுதிய "Letter from Birmingham Jail..." என்ற கடிதம் 21ம் நூற்றாண்டிலும் உலகப்புகழ் பெற்ற ஒன்றாக திகழ்கிறது. பின்னர் விடுதலையான அவர், வேலை மற்றும் சுதந்திரம் கோரி நடத்திய வாஷிங்டன் அணிவகுப்பில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மார்ட்டின் லூதருக்கு அமைதிக்கான நோபல் பரிசு :

"I Have a Dream" என்ற உலகப் புகழ்பெற்ற உரையை அப்போது நிகழ்த்திய மார்ட்டின் லூதர் கிங்(Martin Luther King Nobel Prize), உலகையே தன்பக்கம் ஈர்த்தார். அவருக்கு 1964ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 39. இந்தக் கொலை தொடர்பாக ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மார்ட்டின் லூதர் கிங் ஆவணங்கள் வெளியீடு :

இந்நிலையில், மார்டின் லூதர் கிங்-ஜூனியர் கொல்லப்பட்டது தொடர்பான 2 லட்சத்து 30 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை, டிரம்ப் அரசு வெளியிட்டுள்ளது(Donald Trump on Martin Luther King Jr Murder). இவற்றை வெளியிட மார்ட்டின் லூதர் கிங்கின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வதந்திகள், தவறான தகவல்கள், மார்ட்டின் லூதர் கிங்கின் நற்பெயருக்கு களங்கும் விளைவுக்கும் வாசகங்கள் ஆவணங்களில் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் கோப்புகளில் பெரும்பாலானவை 1977 முதல் 50 ஆண்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 2027 வரை பொது பார்வைக்கு வராமல் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு மடைமாற்றம்? :

"மார்ட்டின் லூதர் கிங் பைல்ஸ்(Martin Luther King Files)" என்பது அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கியமான ஆனால் சர்ச்சைக்குரிய அம்சமாகும். கடும் எதிர்ப்பையும் மீறி இதனை வெளியிட்டு, அமெரிக்காவில் புயலை கிளப்பி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப். Trump Epstein Scandal அமெரிக்காவில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அதை திசை திருப்பவே மார்ட்டின் லூதர் ஆவணங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in