Vice President CP Radhakrishnan Vote in Tamil : 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க டெல்லியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்தனர்.
சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி :
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், 452 வாக்குகளை பெற்று வெற்றி(CP Radhakrishnan Vote) பெற்றார். அவரை எதிர்துப் போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 15 பேர் அளித்த வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
14 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை :
781 எம்பிக்களில் 14 பேர் வாக்களிக்கவில்லை. அவர்களில் 7 பேர் பிஜூ ஜனதாதளம் கட்சியினர். 4 பேர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியினர். ஒருவர் அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர்; மற்ற இருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை எம்பிக்கள்.
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக 14 வாக்குகள் :
மீதமுள்ள 767 எம்பிக்களில் 452 பேர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். இரு அவைகளிலும் சேர்த்து பாஜக தலைமையிலான NDA-ன் பலம் 427 தான். ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 11 எம்பிக்களை சேர்த்தாலும், 438 வாக்குகள் தான் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால், சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 452 ஆகும்.
14 பேர் யார்? பரபரக்கும் டெல்லி :
அப்படி என்றால், வாக்களித்த அந்த 14 பேர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன்(Maharashtra Governor CP Radhakrishnan) பொறுப்பு வகித்ததால், அந்த மாநில எம்பிகளுக்களுடன் நல்ல நட்பில் இருக்கிறார். அந்த வகையில் சிலர் அவருக்கு வாக்களித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் மாற்றி வாக்களித்ததாக கூறப்படுவதை அந்தக் கட்சி மறுத்து இருக்கிறது.
அப்படி அந்த 14 எம்பிக்கள் யார்? இந்தியா கூட்டணியின் எந்தக் கட்சிகளில் இருந்து சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்குகள் பதிவானது என்பது பற்றி டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : துணை ஜனாதிபதியாகிறார் C.P. ராதாகிருஷ்ணன் : குவியும் வாழ்த்துக்கள்
எதிர்க்கட்சி எம்பிகளுக்கு நன்றி :
இதற்கிடையே, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க எதிர்க்கட்சி கூடாரத்தை சேர்ந்த எம்பிக்களுக்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்துள்ளார்.
================