துணை ஜனாதிபதியாகிறார் C.P. ராதாகிருஷ்ணன் : குவியும் வாழ்த்துக்கள்

CP Radhakrishnan Elected As 15th Vice President of India : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
CP Radhakrishnan Elected As 15th Vice President of India
CP Radhakrishnan Elected As 15th Vice President of Indiahttps://x.com/narendramodi?
2 min read

துணை ஜனாதிபதி தேர்தல் :

CP Radhakrishnan Elected As 15th Vice President of India : 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ம் தேதி பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இண்டியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் :

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. முதல் நபராக வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர்கள், என்டிஏ கூட்டணி எம்பிக்கள், சோனியா, ராகுல், வாத்ரா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இண்டி கூட்டணி கட்சி எம்பிக்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த தேர்தலை பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

சி.பி. ராதாகிருஷ்ணன் 452, சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் :

மாலை 5 மணிக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 452 வாக்குகள் பதிவாகின(CP Radhakrishnan Vote). சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் கிடைத்தன. பதிவான வாக்குகளில் 15 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி(C.P Radhakrishnan Wins Vice President Election 2025) பெற்றார். அவருக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு :

1957ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருப்பூரில் பிறந்தார்(CP Radhakrishnan Biography in Tamil). இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ. படித்திருக்கும் அவர், 1998, 1999: கோவையில் இருந்து பாஜக சார்பில் மக்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2003 முதல் 2006 வரை தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்தார். நதிநீர் இணைப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், 93 நாட்களில் 19,000 கி.மீ. துாரம் ரத யாத்திரை நடத்தியவர் சி.பி. ராதாகிருஷ்ணன். 2004ம் ஆண்டு ஐநா சபைக்கு சென்ற எம்பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், அங்கு உரையாற்றினார்.

ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் :

2016ம் ஆண்டு தேசிய கயிறு வாரிய தலைவரகா பதவி வகித்தார். 2023ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார். 2024 மார்ச் 19: கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவி வகித்தார். கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி மகாராஷ்டிர ஆளுநராக பொறுப்பேற்றார். கடந்த மாதம் 17ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க : VP Election : விறுவிறுப்பான வாக்குப்பதிவு : வாக்களித்தார் PM மோடி

துணை ஜனாதிபதியாக 3வது தமிழர் :

இந்தியாவின் 2வது குடியரசு தலைவராக இருந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகித்தார். அவரை தொடர்ந்து ஆர். வெங்கட்ராமன் 1984ம் ஆண்டு முதல் 1987 துணை ஜனாதிபதியாக இருந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனை(CP Radhakrishnan Tamilian) அந்த பொறுப்பினை வகிக்கும் மூன்றாவது தமிழராவார்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in