Vice President Of India Jagdeep Dhankhar Resignations Today 
இந்தியா

துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் ராஜினாமா:மருத்துவ காரணம் என விளக்கம்

Vice President Jagdeep Dhankhar Resignations : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Kannan

ராஜ்யசபா தலைவராக துணை ஜனாதிபதி :

Vice President Jagdeep Dhankhar Resignations : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதியாக இருப்பவரே, மாநிலங்களவை தலைவராக இருந்து அவையை வழி நடத்துவார். எதிர்க்கட்சிகளை சமாளித்து அவையை நடத்துவது என்பது சவாலாகவே இருக்கும். அதன்படி, ராஜய்சபா தலைவராக துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் பொறுப்பு வகித்து வந்தார்.

துணை ஜனாதிபதி ராஜினாமா :

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்(Jagdeep Dhankhar Resigns). தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்தார். ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா முடிவு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.

மேலும் படிக்க : மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம் : முக்கிய மசோதாக்கள் தாக்கல்

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா :

இந்தநிலையில், தான் பதவி விலக எடுத்த முடிவுக்கான காரணத்தை ஜெக்தீப் தன்கர்(Jagdeep Dhankhar Resignation Reasons) விளக்கியுள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக தன்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ல் துணை ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றார்.

ஆளுநர், மத்திய அமைச்சராக தன்கர் :

அதற்கு முன்பு 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக ஜெக்தீப் தன்கர்(Jagdeep Dhankhar) இருந்தார். 199ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சராக பதவி வகித்தவர் ஜெக்தீப் தன்கர்

மேலும் படிக்க : ”ஆபரேஷன் சிந்தூர்” 100 சதவீதம் வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்

===