யார் இந்த ஸ்ரீதர் வேம்பு? :
ZOHO Founder Sridhar Vembu Arattai App : தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த சின்னஞ்சிறு சிறுவன். எட்டிப் பிடிக்கும் அளவிற்கு அப்படி ஒரு முயற்சி, சிறுவயது முதல். எண்ணங்கள் எல்லோம் மேலோங்கி காணப்பட்டு அந்த ஊரிலே தனது பள்ளிப்படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல நினைத்த அந்த சிறுவன் தனது வறுமையை வடிகாலாக்கி, சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மின் பொறியியல் பட்டம் இளங்கலை் பட்டம் பெற்றார்(Sridhar Vembu Biography in Tamil). ஆனால் அந்த நெருப்பு அணையவில்லை, கொளுந்து விட்டு எரிந்தது, அனைவரையும் தன்னுடன் இணைக்க வேண்டும், படிக்காதோறும் பட்டம் பெறாதோறும் மென்பொறுள் நிறுவனத்தில் என்னும் சிந்தனைக்கு அடித்தளம் இட்டு, வெறும் நெருப்பு பந்தத்தை மிகப்பெரிய எரிமலை குளம்பாக மாற்றினார்.
ஸ்ரீதர் வேம்புவின் முதுகலை :
இதைத்தொடர்ந்து முயற்சியின் மேல் வைத்த காதலும், வெற்றி பெற வேண்டும் என எரிந்த தீயும் ஒன்று சேர்ந்த தனது வளர்ச்சிக்காக நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்(Sridhar Vembu Education). அடுத்த கட்டம், பொருளாதாரத்தை உயர்த்தி அனைவரையும் ஒன்று சேர்த்து தொழில் தொடங்க வேண்டும்.ஆனால் அதற்கு எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், கலிபோர்னியாவின் சான் டியாகோவில் குவால்காமில் வயர்லெஸ் பொறியாளராகப் பணியாற்றி தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய வேம்பு , சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்குச் செல்வதற்கு முன்பு சான் ஜோஸ் மற்றும் ப்ளெசண்டனில் வசித்து முழு நேரத்தையும், கவனம் சிதறல் இல்லாமல் வளர்ச்சிக்கு செலவு செய்தார்.
பற்றியது ஜோஹோவின் தீப்பொறி :
1996 ஆம் ஆண்டில், வேம்பு தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து, அட்வென்ட்நெட் என்ற நெட்வொர்க் உபகரண வழங்குநர்களுக்காக ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். வாடிக்கையாளர் உறவு மேலாண்மை சேவைகளுக்கு சாஸ் ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தி, 2009 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஜோஹோ(ZOHO Corporation) என்றும் உழைப்பின் உன்னத சக்தி கொண்ட பெயராக மாற்றப்பட்டது.
தென்காசியில் ஸ்ரீதர் வேம்பு :
ஜோஹோ மூலம் இளம் சிந்தனையாளர்களை ஒன்று சேர்த்த ஸ்ரீதர் வேம்பு, 2019 இல் இந்தியாவின் தென்காசிக்கு குடிபெயர்ந்தார். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் நிறுவனத்தில் 88 சதவீத பங்குகளை(Sridhar Vembu Net Worth) அவர் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில், ஸ்ரீதர் வேம்பு தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் வெளிப்புற செல்வாக்கைத் தவிர்ப்பதற்காக, வேம்பு மற்றும் அவரது இணை நிறுவனர் டோனி தாமஸ் ஆகியோரால் ஜோஹோ முழுமையாக சுயநிதியில் இயங்கியது. வளர்ச்சி என்றால் இதுதான் என மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஸ்ரீதர் வேம்புவின் வளர்ச்சியும், அவர் அனைவரையும் ஒன்று சேர்த்த குணமும் அவரை மேலோங்கி மிளிரச் செய்தது.
கிராமங்களில் ஒளிர்ந்த மென்பொருள் நிறுவனம்
ஸ்ரீதர் வேம்பு மென்பொருள் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு செயல்பாடுகளை நகர்ப்புற மையங்களிலிருந்து இந்தியாவின் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதில் குறிக்கோளாக இருந்தார். இருந்ததை காட்டிலும் அதை செயல்படுத்தி பெரிய மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு முன்அனுபவம், பெரிய பட்டபடிப்பு வேண்டும் என்ற பிம்பத்தை அடித்து உடைத்து , அவரது நிறுவனமான ஜோஹோ, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மத்தளம்பாறையிலும் , ஆந்திராவின் புறநகர் ரேணிகுண்டாவிலும் அலுவலகங்களை நிறுவியது.
இளைஞர்களுக்கு முன்னுரிமை :
பின்னர் தன் எண்ணம்போல், 2004 ஆம் ஆண்டில், அவர் முறையான பல்கலைக்கழகக் கல்விக்கு மாற்றாக கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டுக் கல்வியை வழங்குவதற்காக ஜோஹோ பள்ளிகளை(ZOHO School) தொடங்கி இளம் குச்சிகளை, நெருப்பு பந்தமாக இளைஞர்களை மாற்றி தன் நிறுவனத்திலே பணி அமர்த்தினார்.
தொழில் கல்வி பயின்றோருக்கு வாய்ப்பு :
அங்கு பணியமர்த்த பட்ட பொறியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் கல்லூரிப் பட்டம் பெறவில்லை, ஆனால் ஜோஹோ பள்ளிகளிலிருந்து தொழிற்கல்வி பெற்று இருந்தனர். பல வித முயற்சிகள் மற்றும் எதிர்ப்புகளில் ஒளிர்ந்து பட்டறிவு இல்லா இளைஞர்களையும் ஒன்று சேர்த்து இந்தியாவை திரும்ப செய்தார்.
கௌரவங்களில் ஸ்ரீதர் வேம்பு :
இந்தியாவில் 2019 ஆம் ஆண்டுக்கான எர்ன்ஸ்ட் & யங் என்ற சிறந்த தொழில்முனைவோர் விருதை(Sridhar Vembu Award) பெற்ற அவர், 2021 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்று 2022 ஆம் ஆண்டின் சிறந்த இந்தியராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும்(National Security Advisor Committee) நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர் இளைஞரின் தளராத உழைப்பு இன்று அவரை உலகின் முக்கிய அங்கமா மாற்றி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது.
தொடரும் வளர்ச்சி :
மென்பொருள் நிறுவன வளர்ச்சியில் முதலிடத்தை தக்க வைத்து கொண்ட அவர், தற்போது அரட்டை என்றும் செயலி மூலம் அசத்தியுள்ளார். 4 நாட்களில 4லட்சம் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து, சர்வர் நிலைகுழையும் அளவிற்கு திணறடித்துள்ளது. இந்நிலையில், அடுத்ததொரு அப்டேட்டாக உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களையும் முடக்கி வைத்திருக்கும் அலைபேசியில் உள்ள சமூக வலைதளமான வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட செயலியை விட மாற்று செயலி தயாரிக்க திட்டமிட்டு, செயல்படுத்த தொடங்கியுள்ளார்.
மேலும் படிக்க : சோசியல் மீடியாவில் முதலிடம் பிடிக்கும் அரட்டை! ஜோஹோ அசத்தல்!
சொல்வதை செய்வதில் ஸ்ரீதர் வேம்பு ஜாம்பவான் என்பதை நாம் மேல் குறிப்பிட்டவற்றிலே அறிந்திருப்போம். இருக்கையில் இதை மட்டும் விட்டுவிடுவாரா என்ன?. என ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை ரசிகர்கள், அரட்டை அடித்து கொண்டு இவரின் அடுத்த அப்டேட்டை அதே இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப்பில் பரப்பி வருகின்றனர். தொடருமா இந்த வேம்பின் நிழல், உலக முழுவதும் கற்பக விருட்சமாக..