Is Foam While Boiling Pulses Unhealthy: Scientific Truth Revealed
பருப்பு வேகும்போது பொங்கும் நுரை
சாதாரணமாக வீடுகளில் பருப்பு வகைகளை வேகவைக்கும்போது தண்ணீர் கொதித்த பிறகு மேல் வரும் நுரையை கரண்டி மூலமாக எடுத்து அகற்றிவிடுவோம்.
அந்த நுரையில் சத்து இல்லை என்றும், அது பருப்பின் கழிவு அல்லது உணவின் சுவையைக் கெடுத்துவிடும் என்றும் பலர் கருதுகின்றனர். ஆனால், இது குறித்த அறிவியல் உண்மைகள் முற்றிலும் வேறானவை.
நுரை உருவாவதற்கான அறிவியல் காரணம்
பருப்பு வேகவைக்கும்போது உருவாகும் நுரை ஒரு இயற்கையான விளைவு மட்டுமே. இதில் புரதங்கள், ஸ்டார்ச் மற்றும் சப்போனின்கள் (Saponins) என்ற சேர்மங்களின் கலவை உள்ளது.
2023-ஆம் ஆண்டு நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியான ஆய்வின்படி, பருப்பில் உள்ள புரதங்களும் கார்போஹைட்ரேட்டுகளுமே இந்த நுரை உருவாவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
நுரையை நீக்க வேண்டுமா?
அந்த நுரை பாதுகாப்பற்றது என்றோ உடலுக்குக் கெடுதல் என்றோ எந்த ஆய்வுகளும் கூறவில்லை. நுரையை நீக்காமல் விட்டாலும் சிறிது நேரத்தில் அது பருப்புடனேயே கலந்துவிடும்.
2017-ல் சயின்ஸ் டைரக்ட் இதழில் வெளியான ஆய்வின்படி, பருப்பை நன்றாக சமைத்து சாப்பிடுவதன் மூலமாகவே அதில் இயற்கையாக காணப்படும் சப்போனின்களின் அளவு குறைந்துவிடும்.
சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை
எனவே, பருப்பு வேகும்போது வரும் நுரையை நீக்க வேண்டிய கட்டாயம் இல்லை; அது தனிப்பட்ட விருப்பமே தவிர உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.
பருப்பை சமைப்பதற்கு முன் சரியாக கழுவுதல் மற்றும் போதுமான அளவு நீர் சேர்த்து நன்கு வேகவைத்தல் ஆகியவை மட்டுமே அவசியமான நடைமுறைகளாகும்.
இதையும் படிங்க: ”30 நிமிடங்கள் தான்” : பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவை : போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை, எதிர்பார்ப்பில் பொதுமக்கள்.!
=======