Beware of QR Code UPI Fraud source: ai generated
சிறப்புச் செய்திகள்

கியூஆர் கோடு ஸ்கேன் செய்யும் போது பணமோசடி அபாயம் : இணையப் பயனர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

முன் பின் தெரியாதவர்களின் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதால் ஏற்படும் யுபிஐ பணமோசடி குறித்து பாதுகாப்பு எச்சரிக்கை.

Kavitha prasanna

Beware of QR Code UPI Fraud: Experts Issue Warning to Digital Payment Users

கியூஆர் கோடு ஸ்கேன் மோசடி

முன் பின் தெரியாதவர்களின் கியூஆர் கோடுகளை நீங்கள் ஸ்கேன் செய்யும் போது, எண்ணற்ற யுபிஐ பதிவு கோரிக்கைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதாகவும், தவறுதலாக ஏதேனும் ஒரு கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டால் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தடை கோரிக்கைகளும் மோசடி முறையும்

அண்மையில், சில பயனர்களுக்கு கியூஆர் கோடு ஸ்கேன் செய்த போது, அடையாளம் தெரியாத எண்களிலிருந்து யுபிஐ பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருந்ததாகவும், கவனிக்காமல் ஏதேனும் ஒரு கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கினாலும் அதன் மூலம் பணமோசடி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்

இதன் காரணமாக சந்தேகத்துக்கு உரிய இடங்களில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, நீங்கள் பணம் செலுத்த வேண்டிய உரிய நபரிடம் அவருடைய தொலைப்பேசி எண்ணைப் பெற்று பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

தேவையில்லாத அழைப்புகளை நிராகரித்தல் நலம்

இதுபோன்று ஏமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டால், உடனடியாக எந்தக் கோரிக்கையையும் ஏற்காமல் நிராகரித்து விடுவது நலம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

மக்கள் பரிவர்த்தனையின் போது கவனமாக இருக்க வேண்டும்

பணப்பரிமாற்றத்தை எளிமையாக்க கொண்டு வரப்பட்ட கியூஆர் கோடு மூலம் ஏராளமான மோசடிகளும் நடப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க : ”2026ல் ஸ்மித் மச்சார், 1986ல் உயிர்த்தியாகம் செய்த நீரஜா பானோட்” : இந்தியாவின் பெருமையை உயர்த்திய தீரர்கள்..!

======