ஐயப்ப பக்தர்கள்
Sabarimala Pilgrims Accidental Insurance Expansion : உலகளவில் முதன்மையான கடவுள்களாக கருதப்பட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் பட்டியலில், ஐயப்ப கடவுள் முதன்மை வகிக்கிறார்.மேலும், ஐயப்ப சுவாமிக்கு உலக முழுவதும் ஆங்காங்கே கோவில்கள் கட்டப்பட்டு பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதில் கார்த்திகை, மார்கழி என்றால் ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருப்பர். இந்நிலையில், மாலை போடும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து கேராளவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருமுடி கழற்றி மாலை அவிழ்த்து விரதங்கள் முடிப்பர். அதன்படி மலைக்கு செல்வோர் சிறுவழி, பெருவழி என தேர்வு செய்வதுண்டு. அதிலும் அவர்கள் மலைக்கு ஏறும்பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பர். இவை தொடரும் வகையில் போன ஆண்டு முதலே ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் போது விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
காப்பீடு திட்டம் விரிவாக்கம்
அதிலும் குறிப்பாக, இந்த காப்பீட்டு திட்டம் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது, இதன் எல்லை வரம்பு கேரள மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பேச்சு
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்தாலும், சம்பந்தப்பட்ட பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் : நவ.15 முதல் சிறப்பு பேருந்துகள்
பக்தர்களிடம் 5 ரூபாய் வசூலிக்கப்படும்
மேலும், இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மாநிலத்துக்குள் ரூ.30 ஆயிரமும், வெளிமாநில பக்தர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வழங்கப்படும் என்றும் இதேபோல, சந்நிதானத்துக்கு மலை ஏறிச்செல்லும்போது உயிரிழந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார். இந்த காப்பீட்டு நிதிக்காக ஆன்லைன் தரிசன முன்பதிவு(Sabarimala Pilgrims Insurance Online Ticket) செய்யும் பக்தர்களிடம் ரூ.5 பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.