

சபரிமலை ஐயப்பன் கோவில்
Sabarimala Special Bus From Tamil Nadu : உலகப் புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விழாக்களில், மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மிகவும் விசேஷமானவை. 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் செலுத்தி ஐயப்பனை வழிபட்டு செல்வார்கள்.
கார்த்திகை 1 முதல் மண்டல பூஜை
கார்த்திகை ஒன்றாம் தேதி சபரிமலை சீசன்(Sabarimala Season 2025) தொடங்குகிறது. மண்டல பூஜை ஆரம்பமாவதால், அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்து அதிக அளவு பக்தர்கள் செல்வார்கள்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம் :
தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்(Sabarimala Special Bus) இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு(TNSTC) ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது, நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
பம்பைக்கு பேருந்துகள் இயக்கம்
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள், சாதாரண பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
முன்பதிவு செய்து கொள்ளலாம்
எனவே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் TNSTC செயலி அல்லது இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9445014452, 9445014424, 9445014463 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ’அதிகாரம் கையில் இருக்கும் போது ஏன் கெஞ்சறீங்க’: அன்புமணி விளாசல்
விபத்து காப்பீடு விரிவாக்கம்
இதுமட்டுமின்றி, சபரிமலை செல்லும் பக்தர்களின் குடும்பங்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் விபத்தில் மரணம் அடையும் ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக கேரள அரசு ரூ.5 லட்சம் வழங்கி வருகிறது. இது கேரளா முழுவதுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, கேரள மாநில எல்லைக்குள் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும், மரணம் அடையும் ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
===============