கார்த்திகை மாத விசேஷங்கள்
Karthigai Month 2025 Start and End Date in Tamil : சித்திரை தொடங்கி பங்குனி வரை ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஆன்மீக ரீதியாக, ஜோதிட ரீதியாக பல்வேறு சிறப்புகள் உள்ளன. கார்த்திகை மாதம் என்பது அண்ணாமலையார் ஜோதியாக அருள்பாலித்த மாதமாகும்.
கார்த்திகை மாதத்தின் மகத்துவம்
கார்த்திகை மாதம் மழையும் குளிரும் கலந்த ஒரு மாதமாக இருக்கும். பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் அதிகமாக இருக்கும். இதனால் காலையும் மாலையும் வீட்டு வாசலில் அகல் விளக்கு ஏற்றும் பழக்கம் இருந்தது. கார்த்திகை மாதம் தீபங்களின் பண்டிகை என்று
கார்த்திகை பௌர்ணமி
கார்த்திகை பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த நாளில் தான் பெரும்பாலும் கார்த்திகை தீபம் வரும். இந்த ஆண்டு கார்த்திகை பௌர்ணமி, டிசம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை(Karthigai Pournami 2025 Date) வருகிறது.
ஜோதி வடிவில் சிவபெருமான்
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார், ஜோதி வடிவமாக காட்சியளித்த மாதம் கார்த்திகை. அந்த நாள் தான் மகா தீபத் திருநாளாக கார்த்திகை தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். திருவண்ணாமலையில் அன்று மாலை ஜோதி தரிசனம் செய்ய லட்சக் கணக்கானோர் கூடுவர்.
கார்த்திரை சோமவர விரதம்
சிவபெருமானுக்கு உரிய மாதமான கார்த்திகை மாதத்தில், நான்கு அல்லது ஐந்து திங்கட்கிழமைகளிலும் சோமவார விரதம்(Somavaram Viratham in Tamil) இருப்பது மிக மிக விசேஷம். திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து, ஈசனை வேண்டினால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
அம்மன் கோவில்களில் மாவிளக்கு
அம்மன் கோவில்களில் நோய் தீரவும், குழந்தை வரம் வேண்டியும் கார்த்திகை மாதம் மாவிளக்கு தீபம் ஏற்றுவார்கள். ஒரு சில ஆலயங்களில் மாவிளக்கு தீபத்தை வாழை இலையில் வைத்து தலை மேல் வைத்துக் கொண்டு கோவிலை பெண்கள் வலம் வந்து அம்மனை வழிபடுவார்கள்.
ஐயப்பனுக்கு மாலை அணிவது
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்பவர்கள் கார்த்திகை முதல் நாளில் ஐயப்பனை(Sabarimala Ayyappa Viratham) வேண்டி மாலை போட்டுக்கொண்டு, விரதத்தை துவங்குவார்கள். 41 நாட்கள் அதிகாலையில் குளித்து விட்டு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு பக்தர்கள் விரதம் இருப்பர்.
சூரிய பகவான் வழிபாடு
கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனுக்கு நீர் வைத்து வழிபடுவது வழக்கம். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தானம் செய்வது நல்ல வேலை, தொழில் வளர்ச்சியை கொடுக்கும் என்பது ஐதீகம்.
கால பைரவர் ஜெயந்தி
கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் அவதரித்தார் என்றும் இது மகா காலாஷ்டமி அல்லது காலபைரவர் ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கால பைரவர் அவதரித்த நாளான காலபைரவர் ஜெயந்தி கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமிக்கு பிறகான தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது.
மழையும், லேசான குளிரும், இதமான சூழலும் இருக்கும் கார்த்திகை மாதத்தில் பல்வேறு விரதங்களை அனுசரித்து, இறை வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் புண்ணியங்கள் பெருகி, சுபிட்சமாக வாழ்க்கை அமையும்.
=====================