
ஆடி கிருத்திகை சிறப்புஆடிக் கிருத்திகை விழா :
Aadi Krithigai 2025 Date And Time in Tamil : ஆடி கிருத்திகை என்பது முருகப்பெருமானுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க விழாவாகும். இந்த நாளில், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படும். பக்தர்கள் திரளாக இந்த நிகழ்வில் பங்கேற்று முருகனை வழிபடுவர்.
2025ல் இரண்டு முறை ஆடிக் கிருத்திகை :
இந்த ஆண்டு ஆடி கிருத்திகை இரண்டு முறை வருகிறது. ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில்(Aadi Krithigai 2025 Date) ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது.
ஆடி கிருத்திகையின் சிறப்பு :
முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் விதமாகவும், பார்வதி தேவி அவர்களுக்கு நட்சத்திரமாக இருக்கும் வரத்தை வழங்கிய நாளாகவும் இது கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகன்(Murugan Temple) கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படும். பக்தர்கள் முருகனை வழிபட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
ஆடிக் கிருத்திகை, திருமண தடை நீங்கும் :
ஆடி கிருத்திகை தினத்தன்று(Aadi Krithigai 2025 Viratham) விரதம் இருந்து முருகனை வழிபட்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். ஆடி கிருத்திகை அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, முருகன் படத்தை வைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.
முருகனுக்கு பிடித்தமான மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல், பால், பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
உப்பில்லா உணவோடு நோன்பு :
விரதம் இருப்பவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, முருகனை வழிபடலாம். அடுத்த நாள் காலை உணவு உண்டு விரதத்தை முடிக்கலாம்.
உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை நோன்போ, சஷ்டி நோன்போ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க : "அன்புத் திருவிழா" : குழந்தைகளும் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி 2025
ஆடி கிருத்திகை நாளில் முருகனை வழிபடுவதன் மூலம், வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விழாவானது தென்னிந்தியா, இலங்கை, புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படுவது சிறப்பு.
-----